நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊட்டிக்கு வந்த அந்த 8 பேர்.. 30 பேருடன் தொடர்பு.. அதில் 28 பேருக்கு நெகட்டிவ்.. சூப்பர் செய்தி!!

30 பேரில் 28 பேருக்கு தொற்று இல்லை என தகவல் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

ஊட்டி: மொத்தம் 8 பேர் டெல்லியில் இருந்து ஊட்டிக்கு வந்தவர்கள்.. இதில் 4 பேருக்கு தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேரையும் உடனடியாக தனி வார்டில் அனுமதித்து டெஸ்ட் செய்யப்பட்டது.. அதில் சம்பந்தப்பட்ட 30 பேரில் 28 பேருக்கு தொற்று இல்லை என தகவல் வெளியாகி உள்ளது!

Recommended Video

    ஆசியாவிலேயே இந்தியா தான் மோசம்... அதிர வைக்கும் புள்ளி விவரங்கள்

    கொரோனாவைரஸ் தமிழகத்தில் பரவல் என்ற செய்தி வந்ததுமே நீலகிரி மாவட்டத்தில் தீவிரமான கண்காணிப்பு, எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.. இதற்கு காரணம் கேரளா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் இந்த மாவட்டம் உள்ளது.

    அதனால்தான் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.. எல்லைகள் மூடப்பட்டன.

    மாநாடு

    மாநாடு

    இந்நிலையில்தான் டெல்லி மாநாட்டு விவகாரம் வெடிக்க ஆரம்பித்தது.. அதனால் நீலகிரியில் இருந்து யாரெல்லாம் டெல்லி மாநாட்டுக்கு சென்றனர் என்பது குறித்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர்.மாநாட்டுக்கு மொத்தம் 11 பேர் சென்றிருக்கிறார்கள்... இதில் 2 பேர் டெல்லியில் உள்ளனர்.. ஒருவர் பெங்களூருவில் இருக்கிறார். அதனால் மீதமுள்ள 8 பேர் நீலகிரிக்கு திரும்பினர்.

    ஊட்டி ஆஸ்பத்திரி

    ஊட்டி ஆஸ்பத்திரி

    இந்த 8 நபர்களையும் கண்டறிந்த மாவட்ட நிர்வாகம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து வந்தது. இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகளை டெஸ்ட்டுக்கும் அனுப்பியது.. ரத்த மாதிரி முடிவில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    டெஸ்ட்கள்

    டெஸ்ட்கள்

    அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி முடிவுகள் இன்று வந்துள்ளதாக தெரிகிறது.. இவர்களில் 30 பேரில் 28 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது... 28 பேருக்கும் நெகட்டிவ் என்று டெஸ்ட் வந்துள்ளது.. எனினும் மாவட்ட நிர்வாகம் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    ரத்த மாதிரி

    ரத்த மாதிரி

    மீதமுள்ள 4 பேருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து, 15-வது நாளில் ரத்த மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. முதல் 14 நாட்களில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. தற்போது பாதிப்பு இருப்பதால் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி, ரத்தம், சளி மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

    தொற்று இல்லை

    தொற்று இல்லை

    ஊட்டி காந்தல் பகுதியில் 2 பேர், குன்னூரில் 2 பேர், கோத்தகிரியில் 3 பேர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது.. இப்போதைக்கு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் நிலையில் உள்ளது.. டெஸ்ட் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டிருப்பதால், இந்நிலை மேலும் சுருங்கும், தளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    coronavirus: 28 people were in the separate ward of ooty had no corona infection
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X