நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பாசிட்டிவ்.. டெல்லி போய் வந்த 4 பேருக்கும் தொற்று உறுதி.. நடுங்கும் நீலகிரி.. கிலியில் மக்கள்

நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரியை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இவர்கள் 4 பேருமே டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள்... இதனால் நீலகிரி மாவட்டம் அதிர்ச்சியிலும் கிலியிலும் உறைந்து உள்ளது

Recommended Video

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?

    கொரோனாவைரஸ் தமிழகத்தில் பரவல் என்ற செய்தி வந்ததுமே நீலகிரி மாவட்டத்தில் தீவிரமான கண்காணிப்பு, எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.. இதற்கு காரணம் கேரளா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் இந்த மாவட்டம் உள்ளது.

    அதனால்தான் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.. லாட்ஜ்கள், காட்டேஜ்களும் இழுத்து மூடப்பட்டன. மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் இடைவிடாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிகிச்சைகள்

    சிகிச்சைகள்

    எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளி வாகனங்களும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை... சளி காய்ச்சலுடன் உள்ளவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது... மேலும், அவர்கள் தொடர் கண்காணிப்பிலும் உள்ளனர். இந்தநிலையில், டெல்லி மாநாட்டு விவகாரம் வெடிக்க ஆரம்பித்தது.. அதனால் நீலகிரியில் இருந்து யாரெல்லாம் டெல்லி மாநாட்டுக்கு சென்றனர் என்பது குறித்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர்.

    மாநாடு

    மாநாடு

    மாநாட்டுக்கு மொத்தம் 11 பேர் சென்றிருக்கிறார்கள்... இதில் 2 பேர் டெல்லியில் உள்ளனர்.. ஒருவர் பெங்களூருவில் இருக்கிறார். அதனால் மீதமுள்ள 8 பேர் நீலகிரிக்கு திரும்பினர்... இந்த 8 நபர்களையும் கண்டறிந்த மாவட்ட நிர்வாகம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து வந்தது. இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகளை டெஸ்ட்டுக்கும் அனுப்பியது.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    ஆனால் இந்த மெடிக்கல் ரிப்போர்ட் வருவதற்கு முன்னரே, டெல்லி சென்று வந்த இந்த 4 பேர் வீடுகளையும் தங்கள் கண்காணிப்பில் மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்தது.. ஊட்டியில் காந்தல், பிங்கர்போஸ்ட், குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் இந்த 4 பேரும் உள்ளனர்.. அதனால் இவர்களது வீடு, அதனை சுற்றியுள்ள பகுதிகள் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டன.. யாரும் இந்த பகுதிக்குள் உள்ளே போகவோ, வெளியே வரவோ அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த 1-ம் தேதி முதல் இந்த தீவிர கண்காணிப்பு நடந்து வந்தது.

    கிருமிநாசினி

    கிருமிநாசினி

    5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சீல் வைக்‍கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளைச் சுற்றிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக 2 நாட்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது.. இதனால் மாவட்ட மக்கள் பயந்துவிட்டனர்.. ஆனால் மாவட்ட நிர்வாகமோ இதை பற்றின எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.. அதனால் மக்கள் சற்று குழப்பத்திலேயே இருந்தனர்.

    4 பேருக்கு உறுதி

    4 பேருக்கு உறுதி

    இந்நிலையில் டெல்லி சென்று வந்த அந்த 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது... இதில் காந்தல் பகுதியில் பாதிக்கப்பட்ட 2 பேரும் உடனடியாக கோவை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட 4 பேருமே மாநாட்டுக்கு போய் வந்தவர்கள் என்பதால் இவர்கள் அருகில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் மொத்த மாவட்டமும் பயத்தில் உறைந்து போய் இருக்கிறது!!

    English summary
    coronavirus: 4 corona positive cases in nilgiri district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X