நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுங்கும் குன்னூர்.. ஒருவருக்கு கொரோனா உறுதி.. 4 பேருக்கு அறிகுறி.. கடைகளை மூட போலீஸ் உத்தரவு

குன்னூரில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

Google Oneindia Tamil News

நீலகிரி: குன்னூரில் 4 பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குன்னூர் முழுவதும் மெடிக்கல் ஷாப் உள்பட அனைத்து கடைகளையும் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு... என்ன காரணம்?

    கொரோனாவைரஸ் தமிழகத்தில் பரவல் என்ற செய்தி வந்ததுமே நீலகிரி கண்காணிப்பு, எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.. இதற்கு காரணம் கேரளா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் இந்த மாவட்டம் உள்ளது.

    அதனால்தான் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.. லாட்ஜ்கள், காட்டேஜ்களும் இழுத்து மூடப்பட்டன. நீலகிரியில் நேற்றுவரை யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

    சளி, காய்ச்சல்

    சளி, காய்ச்சல்

    மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் இடைவிடாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது... எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளி வாகனங்களும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை... சளி காய்ச்சலுடன் உள்ளவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது... மேலும், அவர்கள் தொடர் கண்காணிப்பிலும் உள்ளனர்.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    மேலும் மாவட்டத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பிய 732 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்... இந்த சமயத்தில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சென்று விட்டு 10 பேர் திரும்பியிருந்தனர்.. அவர்களுடன் சேர்த்து மொத்தம் 742 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்த நிலையில் தற்போது குன்னூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் அறிகுறிகளுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 4 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதும், ஒருவருக்கு உறுதியாகியுள்ளதாலும், மாவட்டம் முழுவதுமே பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.. 4 பேர் தொற்று உறுதியாகி உள்ளதால், தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

    தனிமை

    தனிமை

    இதில் காந்தல் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் 2 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.. அதனால் காந்தல் பகுதியே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.. யாரும் உள்ளே போககூடாது, வெளியே வரக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இவர்கள் 2 பேரின் வீடுகளில் உள்ள அனைவருமே கண்காணிப்பில் உள்ளனர்.. தொற்று உள்ளவர்கள் 2 பேருமே ஆஸ்பத்திரியில் பரிசோதனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உத்தரவு

    உத்தரவு

    மற்றொருவர் குன்னூர் பகுதியை சேர்ந்தவர்.. குன்னூர் என்பது நீலகிரியின் மைய பகுதி.. இந்த பகுதிக்கு வராமல் பெரும்பாலும் யாராலும் வேறு ஊருக்கு கடந்து செல்ல முடியாது.. குன்னூரில் உள்ள மொத்த கடைகளையும் மூட உடனடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னொருவர் ஊட்டி ஃபிங்கஸ்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர்.. 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது மாவட்ட மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.

    English summary
    coronavirus: coronavirus effect for 4 people in coonoor
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X