நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஏன் இப்படி ஒட்டி நிக்கறீங்க.. தக்காளி என்ன விலை.. டிஎஸ்பியை வரசொல்லுங்க" லெப்ட் ரைட் வாங்கிய திவ்யா

ஊட்டி மார்க்கெட்டில் கலெக்டர் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்

Google Oneindia Tamil News

ஊட்டி: "டிஎஸ்பியை வரசொல்லுங்க.. வேற வழி இல்லை.. தக்காளி என்ன விலை... ஏன் இப்படி ஒட்டி ஒட்டி நிக்கறீங்க?" என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் ஊட்டி மார்க்கெட் கடைக்காரர்களை லெப்ட் & ரைட் வாங்கிவிட்டார்.

Recommended Video

    TN CM Edappadi Palanisamy speech | முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நீலகிரியில் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார்.. அரசு ஆஸ்பத்திரி, மார்க்கெட், பொது இடங்கள் என சுற்றி சுற்றி ஆய்வு செய்து வருகிறார்.

    மலை மாவட்டம் என்பதாலும், பக்கத்திலேயே கேரளா, கர்நாடகா மாநிலம் உள்ளதாலும் வைரஸ் தொற்று ஏற்படாமல் முழு மூச்சுடன் களப்பணியில் இறங்கியிருக்கிறார். இப்போது 144 தடை உத்தரவு என்பதால் அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டும் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் திடீரென நுழைந்து ஆய்வு செய்தார்.

    ஆவேசம்

    ஆவேசம்

    அப்போது கூட்டம் கூட்டமாக கஸ்டமர்களை கடைக்காரர்கள் தங்கள் கடை முன்பு நிற்க வைத்திருந்தனர்.. இதை பார்த்ததும் ஆவேசமானார்.. உடனிருந்தவர்களிடம், "டிஎஸ்பியை வரசொல்லுங்க.. எத்தனை முறை இவங்களுக்கு சொல்றது? மைக் போட்டு ஒருத்தரை இங்கயே நிக்க வெச்சிடுங்க.. 10, 10 பேரா மார்கெட் உள்ளே போய் பொருட்களை வாங்கிட்டு வரட்டும்" என்று உடனிருந்தவர்களிடம் சொல்கிறார்.

    மாஸ்க் எங்கே?

    மாஸ்க் எங்கே?

    பிறகு காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம், "ஏன் இப்படி ஒட்டி ஒட்டி நிக்கறீங்க? தயவுசெய்து தள்ளி நில்லுங்க.. உங்க நல்லதுக்குதான் சொல்றோம்.. 3 அடி டிஸ்டன்ஸ் விட்டு நிக்க சொல்றாங்க.. தயவுசெய்து எல்லாரும் மாஸ்க் போடுங்க.. மாஸ்க் இல்லைன்னா, மகளிர் திட்டத்தில தர்றாங்க.. வாங்கி உடனே போடுங்க" என்றார்.

    தக்காளி கிலோ எவ்ளோ?

    தக்காளி கிலோ எவ்ளோ?

    ஒவ்வொரு கடைகளையும் கலெக்டர் பார்வையிட்டு கொண்டே வந்தார்... திடீரென ஒரு கடையில், "தக்காளி கிலோ எவ்ளோ, அந்த கடையில் 20 ரூபாய், இங்கே ஏன் 40 ரூபாய்? யார் யார், எந்த கடையில எவ்ளோ விக்கறீங்க? எல்லாரும் அவங்கங்க கடையில காய்கறிகள் எவ்ளோ விக்கறீங்கன்னு ரேட் எழுதி போர்டு வைங்க.. ஒரு கிலோ வெங்காயம், தக்காளி, பழங்கள், எவ்ளோ விலைன்னு எழுதி வைங்க... அத்தியாவசிய பொருட்களை கிடைக்கதான் உங்களை கடை திறந்து உட்கார வெச்சிருக்கு.. இவ்ளோ விலையா? ஒருத்தர்தான் கடையில நிக்க விடணும்" என்று சொல்லியபடி நகர்ந்தார்.

    ஆய்வு

    ஆய்வு

    பின்னர் இன்னொரு கடையை பார்த்ததும் கொந்தளித்துவிட்டார் கலெக்டர், "சோப்பு தண்ணியை கடைக்கு முன்னாடி வெக்க மாட்டீங்களா? பேசாம கடையை இழுத்து மூடுங்க.. சொன்ன பேச்சை யாருமே கேட்க மாட்டீங்களா? 10 தடவை கலெக்டர் வந்து சொல்லணுமா? யாரெல்லாம் கடை முன்னாடி சோப்பு தண்ணி வெக்கலையோ கேஸ் புக் பண்ணுங்க.. ஜனங்க என்ன ஆவாங்க.. பிளீச்சிங் பவுடர் போடுங்க.

    ஒரு மணி நேரத்துல வருவேன்

    ஒரு மணி நேரத்துல வருவேன்

    பேசாம ஒன்னு பண்ணுங்க... நீங்க கடையை மூடுங்க.. நான் போய் பொருளை ஜனங்களுக்கு வெளியில வித்துக்கறேன்... டெட்டால் சோப்பு ஒன்னு வெக்க மாட்டீங்களா? அது உங்களுக்கும்தான் நல்லது.. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கணும்.. அதே சமயம் மக்களுக்கும் கிருமி பரவக்கூடாது.. தயவுசெய்து புரிஞ்சுக்குங்க.. எல்லாத்தையும் சரி பண்ணி வைங்க.. ஒரு மணி நேரத்தில் திரும்பவும் வருவேன்" என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு அடுத்த ஆய்வுக்கு கிளம்பி சென்றார்.

    English summary
    coronavirus: nilgiris collector surprise visit to gov market
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X