நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெக ஜோதியாய் ஒளிர்ந்த நீலகிரி.. மலை மாவட்டம் அதிர வெடித்த வெடி சத்தம்.. சிலிர்த்த 9 நிமிட ஒற்றுமை

நீலகிரி மாவட்டத்தில் 9 நிமிடம் விளக்கு அணைத்து வைக்கப்பட்டது

Google Oneindia Tamil News

ஊட்டி: இந்தியாவின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்கு நன்றி சொல்லவும், நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தவும் கொரோனாவுக்கு எதிராக இன்றைய தினம் இரவு 9 மணிக்கு நீலகிரியில் உள்ள விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன!!

Recommended Video

    நாடு முழுவதும் களைகட்டிய ஒற்றுமை தீபம்... பிரபலங்களும், தலைவர்களும் விளக்கேற்றினர்

    கொரோனாவுக்கு எதிராக ஏப்ரல் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் அணைத்து வைக்க வேண்டும், என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார்.

    coronavirus: switching off lights for 9 minutes at 9 pm today in nilgiris

    மோடியின் இந்த அறிவிப்பு இப்போது வரை சர்ச்சையாகி வருகிறது.. நாடு இருக்கும் இக்கட்டான நிலையில் ஆக்கப்பூர்வமான அறிவிப்போ, அறிவுப்பூர்வமான செயல்பாடோ, உபயோகமான திட்டங்களோ, எதுவுமே இல்லாமல் இப்படி விளக்கு ஏற்ற சொல்கிறாரே என்ற அதிருப்தியும் நிலவுகிறது.

    coronavirus: switching off lights for 9 minutes at 9 pm today in nilgiris

    இன்னொரு பக்கம் ஒரே நேரத்தில் மொத்தமாக விளக்கை இப்படி அணைப்பது தீங்கு என்றும் மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட வருகின்றன. எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் அத்தனையையும் பொடி பொடியாக நொறுக்கி மக்கள் தங்கள் ஆதரவை பிரதமருக்கு அளித்தனர்.

    coronavirus: switching off lights for 9 minutes at 9 pm today in nilgiris

    குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே விளக்குகள் அனைத்துமே ஏற்றி வைக்கப்பட்டன.. வீடுகளுக்கு முன்பு அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.. இதனை செல்போனில் வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து கொண்டனர்.

    குறிப்பாக குழந்தைகள் இந்த விளக்கு ஏற்றுவதில் அதிக ஆர்வம் காட்டினர்.. அவர்களுக்கு விளக்கு ஏற்றுவதன் இதன் நோக்கம் தெரியாவிட்டாலும், டார்ச் லைட்டுகளையும், செல்போன் லைட்டுகளையும் அகல் விளக்குகளையும் ஆட்டி பிடித்து தங்கள் குதூகலத்துடன் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த 9 நிமிட நேரத்தில் வெடிசத்தமும், பட்டாசு சத்தமும் நீலகிரியின் மலைப்பகுதியை அதிர வைத்தன.. தீபாவளியும், கார்த்திகை தீபமும் ஒன்று சேர்ந்ததுபோல உணரப்பட்டது.. பொதுவாக நீலகிரி மலை மாவட்டம் என்பதால் இருள்சூழ்ந்த பகுதிகள் அதிகம்... எனினும் வீடுகளின் வாசலிலும், மொட்டை மாடிகளிலும் மின்மினிப்பூச்சிகள் போல விளக்குகள் எரிவதை பார்ப்பதற்கே வித்தியாசமாகவும், அழகாகவும் இருந்தது.. விளக்கு ஏற்றுவதை முழுமையாக 9 நிமிடத்தில் மக்கள் ரசித்து செய்தனர்.

    இப்படி விளக்கை ஏற்றுவதால் கொரோனா சாகாதுதான்.. ஆக்கப்பூர்வமான அறிவிப்பு இது இல்லைதான்.. ஆனால் எந்த ஒரு அசுரத்தனத்துக்கு எதிராக செயல்படவும் நமக்குள் ஒரு ஒற்றுமையும், அரவணைப்பும் தேவைப்படுகிறது.. அதைதான் பிரதமர் விளக்கு ஏற்றிவைத்து வெளிப்படுத்தி சொன்னார்.. அந்த ஒற்றுமையின் வலிமையை நிச்சயம் இந்த 9 நிமிட இருட்டிலும் நம்மால் காண முடிந்தது!

    English summary
    coronavirus: switching off lights for 9 minutes at 9 pm today in nilgiris
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X