நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெல்ல மெல்ல பிஸியானது ஊட்டி.. டீக்கடைகள் திறப்பு.. அங்கேயே வாங்கி அங்கேயே குடித்து மக்கள் ஹேப்பி!

ஊட்டியில் பல இடங்களில் டீ கடைகள் திறக்கப்பட்டுள்ளன

Google Oneindia Tamil News

ஊட்டி: காலங்காத்தாலேயே டீக்கடைகள் திறக்கப்பட்டு விடவும், டீயை வாங்கி அங்கேயே குடிக்க ஆரம்பித்தனர் ஊட்டி மக்கள்.. பார்சல் எல்லாம் எதுவும் இல்லை.. நேரம் செல்ல செல்ல மக்கள் நடமாட்டம் அதிகமாக தொடங்கியதும் அனைத்தும் சமூக விலகலுக்குள் கொண்டு வரப்பட்டன.. எனினும் இவ்வளவு நாள் கழித்து இன்றுதான், லேசாக பிஸியாக தொடங்கி உள்ளது ஊட்டி!

Recommended Video

    மெல்ல மெல்ல பிஸியானது ஊட்டி.. டீக்கடைகள் திறப்பு.. அங்கேயே வாங்கி அங்கேயே குடித்து மக்கள் ஹேப்பி!
     coronavirus: tea shops opened in nilgiris

    லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு இன்று முதல் தமிழகம் முழுவதும் தளர்த்தப்பட்டுவிட்டன.. அந்த வகையில் டீ கடைகளும் ஒன்று.. இன்று காலை 6 மணி முதல் டீ கடைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

     coronavirus: tea shops opened in nilgiris

    ஆனால் நிறைய விதிமுறைகளுடன் அவைகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டுள்ளது.. டீக்கடைகள் என்றாலே கடைகளில் போடப்படும் பெஞ்சுகள்தான் முக்கியம்.. ஆனால் இந்த பெஞ்சுகள் அகற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

     coronavirus: tea shops opened in nilgiris

    அந்த வகையில் ஊட்டியிலும் டீக்கடைகள் திறக்கப்பட்டன.. ஆனால் அறிவுறுத்தியபடி பெஞ்சுகள் போடவில்லை என்றாலும், மக்கள் டீக்கடைகளில் நின்று டீ குடிக்க ஆரம்பித்தனர்.. பார்சல் மட்டுமே அனுமதி என்று சொல்லப்பட்டதால், நிறைய கடைகள் ஊட்டியில் திறக்கவே இல்லை.. பார்சல் வாங்கி செல்வது ஊட்டியில் மிகவும் குறைவு.. அதனால் நஷ்டம் வரும் எனக்கருதி கடைகள் சிலர் திறக்கவில்லை.

     coronavirus: tea shops opened in nilgiris

    காலை 8 மணி வரை ரோட்டில் நடமாட்டங்கள் குறைவாக இருந்தால், பலர் டீக்கடைகளிலேயே நின்று டீ குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.. அவர்கள் மாஸ்க்குகளும் அணியாமல்தான் வந்தனர்.. டீயை வாங்கி கடைக்கு வெளியேவே அருகிருகில் நின்று குடித்ததை காண முடிந்தது.

    சென்னையை அடுத்த திருமழிசையில் புதிய காய்கறி சந்தை- இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது சென்னையை அடுத்த திருமழிசையில் புதிய காய்கறி சந்தை- இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது

    இவர்களில் பெரும்பாலும் தூய்மை பணியாளர்கள்தான்.. சாலைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பார்சல் வாங்கி குடிக்க முடியாத சூழல்.. அதனால் அங்கேயே நின்று டீ குடித்தனர்.. 8 மணிக்கு பிறகு மக்கள் நடமாட்டம் அதிகமாக துவங்கியதும், சமூக விலகலை தானாகவே கடைப்பிடிக்க தொடங்கிவிட்டனர்.

     coronavirus: tea shops opened in nilgiris

    எனினும் ஊட்டியில் எங்கு திரும்பினாலும் டீ கடைகளாகவே இருக்கும் நிலையில் இப்போது அப்படி இல்லை.. அந்த எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் கொஞ்சம் பிஸி எட்டிப்பார்க்க துவங்கி உள்ளது.

    English summary
    coronavirus: tea shops opened in nilgiris district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X