For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது.. ஊட்டியில்.. நடுரோட்டில் மான்கள் லூட்டியா.. ரணகளத்திலும்.. ஏன்டாப்பா இப்டி கிளப்பி விடறீங்க

ஊட்டி சாலையில் மான்கள் இருப்பது போன்ற போட்டோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

ஊட்டி: ஊட்டி ரோட்டில் மான்கள் சுற்றி கொண்டிருக்கின்றன என்று ஒரு செய்தியும், கூட்டமாக மான்கள் நடு ரோட்டில் படுத்து ஓய்வெடுக்கும் படம் ஒன்றும் வைரலாகி வருகிறது! இப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்ய என்ன காரணம்?

2 நாட்களாக ஒரு போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகிறது.. அகன்ற சாலையின் நடுவில் மான்கள் நெருக்கி நெருக்கி படுத்து கொண்டிருக்கின்றன.

சில மான்கள் ரோட்டில் ஹாயாக நடமாடியபடியும் உள்ளன. இதை வைத்து, ஊட்டி சாலையில் மான்கள் என்று பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் முழுக்க இந்த மான்கள் போட்டோதான் ஷேர் செய்யப்பட்டன.

உண்மை இல்லை

உண்மை இல்லை

என்னடா என்று விசாரித்துப் பார்த்தால்.. இது உண்மை இல்லை.. அட இது ஊட்டியே இல்லை.. நாடு முழுதும் லாக்டவுன் கட்டுப்பாட்டில் உள்ளது.. ஊரடங்கு உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி உள்ளன.. அப்படித்தான் ஊட்டியும் இப்போது உள்ளது. ஆனால் ஊட்டி-கோவை நெடுஞ்சாலையில் மான்கள் கூட்டமாய் அமர்ந்து இருப்பதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

ஜப்பான்

ஜப்பான்

உண்மையில் இந்தப் படம் உள்ள இடம் ஜப்பான் நாட்டில் உள்ளது.. அங்குள்ள நாரா நகரத்தின் சாலைகளில் மான்கள் அடிக்கடி வந்து இப்படித்தான் உட்கார்ந்து கொள்ளுமாம்.. அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு மான்கள் அந்த சாலையில் கூட்டமாக உட்கார்ந்திருந்ததை யாரோ போட்டோ எடுத்துள்ளனர்.. அந்த போட்டோவைதான் பதிவிட்டும் வருகின்றனர். இந்த சாலை பார்ப்பதற்கு ஊட்டி போலவே இருக்கவும், நம் மக்களும் அதை ஊட்டி என்றே நம்பி ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

சிறுவன்

சிறுவன்

"#கோவையில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் #மகிழ்ச்சியாக இருக்கும் #மான்கள்.. கோவை டூ #ஊட்டி மெயின் ரோடு" என்றெல்லாம் பதிவுகளை போட்டு வருகின்றனர். இந்த போட்டோவில் ஒரு சிறுவன் சைக்கிளில் நின்று கொண்டிருக்கிறான்.. இன்னொருவர் நடந்து செல்கிறார். அவர்களை பார்த்தாலே தெரிகிறது அப்படியே ஜப்பானியர்கள் என்று.

வைரல் போட்டோ

உண்மையிலேயே ஊட்டி ஏரியின் மறு கரையில் மான் பூங்கா இருக்கிறது.. இந்த பூங்கா முதுமலை புலிகள் காப்பகம் கட்டுப்பாட்டில் உள்ளது... இரை தேடி எப்போதாவது மான்கள் ஒன்றிரண்டு நகரத்துக்குள் வந்துபோகுமே தவிர, இப்படி மொத்தமாக சாலையில் உட்கார்ந்தது இல்லை.. ஆனால் எதற்காக இந்த போட்டோ ஊட்டி ரோடு என்று பதிவிட்டு ஷேர் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.. 21 நாட்கள் பொழுதை பயனுள்ள வகையில் கழிக்க முடியாமல் எதையாவது கிளப்பி விட்டு வருகிறார்கள் வீணர்கள்!

English summary
fake news about deers roaming in ooty road
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X