நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுழற்றி அடித்த சூறாவளி.. பொத்தென்று விழுந்த மரம்.. சிக்கிய இரட்டையர்கள்.. ஒருவர் பலி

Google Oneindia Tamil News

குன்னூர்: சுழட்டி சுழட்டி அடித்த சூறாவளியால், ராட்சச மரம் பொத்தென்று விழுந்ததில் ராணுவ வீரர் பிரதீப் இறந்துவிட்டார்!

இந்த முறை நீலகிரி மாவட்டத்தில் காற்றுக்கும், மழைக்கும் கொஞ்சம் கூட பஞ்சமே இல்லை. மழை இல்லாத நாள் இல்லை. சூறாவளி வீசாத பொழுதும் இல்லை. அப்படி ஒரு காற்றும், மழையும். ஊரே கிடுகிடுத்துப் போய்க் கிடக்கிறது கடும் குளிரால். சுற்றுலாப் பயணிகளுக்கு இதெல்லாம் திரில் கலந்த சந்தோஷ அனுபவம்தான்.

இந்த நிலையில் ஒருவர் மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ வீரராக இருந்தவர் பிரதீப். சொந்த ஊர் கேரளா. இவர் மராத்தான் போட்டியில் பங்குபெற கோவை ராணுவ மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்! லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்!

குன்னூர்

குன்னூர்

இந்நிலையில், இன்று காலை இவரை பார்க்க இவரது தம்பி பிரதீஷ் கோவை வந்திருந்தார். பிரதீப், பிரதீஷ், இருவருமே இரட்டையர்கள். வயது 26 ஆகிறது. கோவையிலிருந்து இருவரும் பைக்கில் கிளம்பி குன்னூருக்கு வந்து கொண்டிருந்தனர். ராணுவ வீரர் பிரதீப் பைக்கை ஓட்ட, பிரதீஷ் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்தார். நேற்று குன்னூரில் மழை வெளுத்து வாங்கியது.

ராட்சத மரம்

ராட்சத மரம்

vசூறாவளி காற்றினால் மரங்கள் எல்லாம் தாறுமாறாக விழுந்து கிடந்தன. இதனால் வண்டிகள் எல்லாம் மெதுவாகத்தான் சென்று வருகின்றன. அப்படிதான் மெதுவாக பிரதீப் விண்டியை ஓட்டி வந்தார். மேட்டுப் பாளையம்- குன்னூர் இடையே உள்ள மரப்பாலம் அருகே வந்தபோது ரோட்டோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று பொத்தென்று சாய்ந்தது.

2 கார்கள்

2 கார்கள்

மரம் அப்படியே பைக்கில் வந்த இரட்டையர்கள் மீது விழுந்தது. அவ்வளவு பெரிய மரம் விழுந்ததும் எப்படி சமாளிப்பதென தெரியாமல் பிரதீப், பிரதீஷ் தடுமாறி கதறினார்கள். மேலும் அங்கு வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீதும் மரம் விழுந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. கார்தான் நொறுங்கி விட்டது.

விசாரணை

விசாரணை

மர இடுக்கில் படுகாயமடைந்த பிரதீப், பிரதீஷை அங்கிருந்தோர் மீட்டு குன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பிரதீப் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். பிரதீஷ் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முறைப்படி வெலிங்டன் ராணுவ முகாம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

English summary
Tree collapsed Army soldier death in Coonoor due to Heavy Rain and one injured
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X