நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள்

தொடர் மழை காரணமாக நீலகிரியில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ஊட்டி: அப்படியே அலேக்காக சரிந்து கொண்டு தண்ணீரில் அடித்து செல்லப்படுகின்றது நீலகிரியின் நிலப்பகுதிகள்.. இது சம்பந்தமான வீடியோ காட்சியும் வெளியாகி மக்களுக்கு கலக்கத்தை தந்து உள்ளது.. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இப்படித்தான் நிலங்கள் சரிந்து வெள்ளத்தில் அடித்து கொண்டு போகிறது.

Recommended Video

    அப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள்

    வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் இந்த சமயத்தில் பெய்யக்கூடிய மழைதான் இதுஎன்றாலும், கடந்த 2 வருஷமாகவே மாவட்டத்தில் மழை இல்லை.. இப்போது மொத்தமாக பெய்ய தொடங்கிவிட்டது.

    கடந்த ஒரு வாரமாகவே பலத்த மழையை நீலகிரி சந்தித்து வருகிறது.. அதிலும் இந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டே இருந்தது.. ரோடுகளில் எந்த பக்கம் பார்த்தாலும் மரங்கள் விழுந்தன.

    அப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள் அப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள்

     கரண்ட் கம்பங்கள்

    கரண்ட் கம்பங்கள்

    சில முறிந்து விழுந்தபடி இருந்தது.. கரண்ட் கம்பிகளோ அந்தரத்தில் அறுந்து தொங்கி கொண்டிருந்தன. இதனால் மாவட்டமே இரவு நேரங்களில் இருளில் மூழ்கும் நிலையும் ஏற்பட்டது.. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இப்போது கூட நீலகிரியில் இன்னும் மழை நீடிக்கும் இருக்கும் என்று சொல்கிறார்கள்.. ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலப்பகுதி சரிந்து விழுந்தது.

     மீட்பு குழு

    மீட்பு குழு

    விழுந்த அந்த பகுதிகள் அப்படியே மழை நீரோடு சேர்ந்து அடித்து கொண்டு போனது.. இப்படி மண் சரிவு ஏற்பட்ட பகுதிகள் ஏராளம்.. இதனால் அந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 30 மீட்புக் குழுக்கள் நீலகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விரைந்து வந்துள்ளனர்.

     நிலச்சரிவு

    நிலச்சரிவு

    ஆனால் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு, வீடு இடிந்தது எத்தனை என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளிவரவில்லை.. ஆனால், கூடலூர், குந்தா, அவலாஞ்சி, போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.. அது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது..

     மீட்பு நடவடிக்கை

    மீட்பு நடவடிக்கை

    இந்த மண்சரிவு ஏற்பட்டதாலும், மரங்கள், கரண்ட் கம்பிகள் சாய்ந்து விழுந்ததாலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது... தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறையினர் என மொத்த பெரும் இந்த போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்... விழுந்த மரங்களை அகற்றும் பணி நடக்கிறது.

     ஒருவர் பலி

    ஒருவர் பலி

    கரண்ட் கம்பிகளை சரி பெய்யும் பணியும் நடக்கிறது.. அவலாஞ்சியில் மட்டும் 39 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சொல்கிறார்கள்.. பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ஒருவர் மரம் விழுந்ததில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரமும் நடந்துள்ளது.

     பலத்த காற்று

    பலத்த காற்று

    தற்போது அவிலாஞ்சி பகுதியில் காற்று வேகமாக அடித்து வருகிறது.. இதனால் சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.. இதில், நீலகிரி மாவட்டத்தில் மழை பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், முழு முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.

    English summary
    heavy rain in nilgiris district and landslide, shocking video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X