நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடிய விடிய பெய்த கனமழை.. உருகுலைந்தது குன்னூர்.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

Google Oneindia Tamil News

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை குன்னூர் நகரை மொத்தமாக சிதைத்துள்ளது. நிலச்சரிவு அபாயம் நிறந்த நகரான குன்னூரில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு அடிக்கடி கனமழை கொட்டித்தீர்க்கிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவ மழை இரண்டுமே மிகப்பெரிய அளவில் கனமழையை நீலகிரி மாவட்டத்துக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில் வடகிழக்கு பருவ மழை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அதிக அளவு கொட்டித்தீர்க்கிறது.

முரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதிமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி

குன்னூர் நகரம்

குன்னூர் நகரம்

நிலச்சரிவு அபாயம் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தால் இயற்கையாவே நிலச்சரிவு ஏற்பட்டுவிடும். இந்த சூழலில் குன்னூரில விடிய விடிய பெய்த கனமழையால் அந்த நகரமே உருகுலைந்து போய் உள்ளது.

விடிய விடிய கனமழை

விடிய விடிய கனமழை

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரிவு தொடங்கி அதிகாலை ஐந்து மணி, விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக குன்னூர் நகர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது.

அடித்துச்செல்லப்பட்டது

அடித்துச்செல்லப்பட்டது

குன்னூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. சாலையில் மண் சரிவுவுடன் மரங்களும் ஆங்காங்கே விழுந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோத்திரி வழியாக

கோத்திரி வழியாக

கொலக்கம்பையில் கனமழையால் வீடுகள் இடித்து சேதமடைந்துள்ளன. பர்லியார் மண் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பு அனுப்பப்படுகிறது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

English summary
heavy rainfall in coonoor, roads at landslide, city flooded, vehicles rute chnaged via Kotagiri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X