அய்யயோ.. "பூனைக்குட்டி" என நினைத்து.. சிறுத்தையை இடுப்பில் வைத்த நபர்.. அப்பறம் என்னாச்சு பாருங்க
: பூனைக்குட்டி என்று சிறுத்தைக்குட்டியை தூக்கி சென்ற நீலகிரி மக்கள்
ஊட்டி: நீலகிரி மாவட்டமே 2 நாட்களாக, கிடுகிடுவென நடுங்கி கொண்டிருக்கிறது.. குளிரால் இல்லை.. அடுத்தடுத்து நடந்த 2 விதமான கலக்க சம்வங்களால்...!
Recommended Video
நீலகிரி மாவட்டத்தை சுற்றிலும் வனப்பகுதியும் தேயிலை தோட்டமும் உள்ளது.. அதனால், சிறுத்தை, கரடி, யானை நடமாட்டங்கள் இங்கு அதிகம்.
எத்தனையோ மனித உயிர்களை சிறுத்தைகள் அடித்து கொன்றுள்ளன.. அதனால், எந்நேரமும் இந்த காட்டு விலங்குகளை நினைத்து மாவட்ட மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கும் சூழல் உள்ளது.

புலம்பட்டி
இப்படித்தான் நேற்று ஒரு சம்பவம் நடந்தது.. கூடலூரை அடுத்த புலம்பட்டியில் ஒரு தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.. அப்போது, தேயிலை செடிகளுக்கு நடுவே பிறந்து ஒரு சில நாட்கள் மட்டுமே ஆன பூனைக்குட்டி இருப்பதை பார்த்தனர்..

சிறுத்தைக்குட்டி
அப்போதுதான் பிறந்திருந்தது என்பதால், தோட்ட தொழிலாளர்கள் அந்த பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு தங்கள் வீட்டுக்கு எடுத்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த நேரம், எதிரே வந்த சிலர், என்னங்க, சிறுத்தையை தூக்கிட்டு எங்கே போறீங்க என்று கேட்டுள்ளார்.. இதைக் கேட்டு பதறி போய்விட்டார்கள் தொழிலாளர்கள்.. அது பூனைக்குட்டி இல்லையாம்.. நிஜமாகவே சிறுத்தைக்குட்டி.. பார்ப்பதற்கு பூனை போலவே இருந்துள்ளது..

குட்டிப்புலி
பிறகு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து, சிறுத்தை குட்டியை, அதே தோட்டத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். காரணம், தாய் சிறுத்தை, இந்த குட்டியை விட்டுவிட்டு இறை தேட சென்றிருக்கும், மறுபடியும் வந்து குட்டியை காணாமல் தேடும் என்பதால், அங்கேயே விட்டுள்ளனர்.. இன்னும் அம்மா சிறுத்தை அங்கு வரவில்லை.. அது வந்தால், கையோடு பிடித்து போக, சிசிடிவி காட்சியை கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.

கொடநாடு
அதேபோல, இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் புதூர் பகுதியில், முருகன் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார்.. இந்த நாய் திடீரென குரைத்து கொண்டே இருந்திருக்கிறது.. நாய் வித்தியாசமாக குறைக்கவும், சந்தேகமடைந்த முருகன் ஜன்னல் வழியாக வீட்டின் வெளியே எட்டிப் பார்த்தார்.. அப்போது வாசலில் ரத்தம் கொட்டிக் கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார்..

சிறுத்தைகள்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தன்னுடைய வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவை போட்டு பார்த்தார்.. அப்போதுதான், ஒரு சிறுத்தை அங்கே வந்து நாயை தன் வாயால் கவ்விச் செல்வது பதிவாகியிருந்தது... இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்குத் முருகன் தகவல் சொல்லவும், கோத்தகிரி வனத்துறையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சிறுத்தையையும் காணோம்.. குடியிருப்பு பகுதிக்கே சிறுத்தை வந்துவிட்டதால், பீதியில் உறைந்து உள்ளனர்..!












Click it and Unblock the Notifications