நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கே இங்க இருந்த நிலத்தை காணோம்.. கேக்கை வெட்டி எடுப்பதை போல மாயம்.. நீலகிரி நிலச்சரிவு ஷாக் காட்சி

Google Oneindia Tamil News

ஊட்டி: கேக்கை வெட்டி எடுப்பதை போல நிலப்பகுதி மிதந்து செல்லும் காட்சி திகில் ஏற்படுத்துகிறது. நீலகிரி மாவட்டத்தின் எமரால்டு பகுதியில்தான் இப்படி ஒரு நிலச் சரிவு இன்று ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    கேக்கை வெட்டி எடுப்பதை போல மாயம்.. நீலகிரி நிலச்சரிவு ஷாக் காட்சி

    ஒரே இரவில் கூடலூரில் 335 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. மேலும் பலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மழையில் சேதமடைந்தன.

    150 மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. மூன்றாவது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு எல்லா பகுதிகளும் இருளில் மூழ்கியுள்ளன.

    அந்த வானிலையில ஆடறது ரொம்ப கஷ்டம்... ஆனா நிறைய டைம் கிடைக்கும்.. ரெய்னா

    தொலைதொடர்பு துண்டிப்பு

    தொலைதொடர்பு துண்டிப்பு

    தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை தொடர்வதால் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவிலேயே இந்த ஆண்டு இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 58.1 செமீ மழைப் பதிவாகியுள்ளது.
    இங்கு மின்வாரிய குடியிருப்புகள் 30 மட்டுமே இருப்பதால் இவர்கள் பெரும்பாலும் வெளியில் வருவது குறைவு என்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் மழை நின்றபாடில்லை.

    எமரால்டு நிலச்சரிவு

    எமரால்டு நிலச்சரிவு

    எனவே நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில், நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.
    இதனிடையே எமரால்டு பகுதியில், நடைபெற்ற நிலச்சரிவு, காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்படியே ஆற்றில் வெள்ள நீர் போவதை போல நிலப்பரப்பு அப்படியே மிதந்தபடி பயணிக்கும் காட்சி பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

    ஆபத்து

    ஆபத்து

    அந்த இடத்தில் ஆடு, மாடு, மனிதன் என யார் இருந்தாலும், அப்படியே பூமிக்குள் மூழ்கிவிடுவார்கள், அப்படித்தான் உள்ளது, அந்த நிலச்சரிவு காட்சி. பார்க்க ஏதோ கேக்கை வெட்டி எடுப்பது போல தெரிந்தாலும், அதன் ஆபத்து மிக மோசமானது.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    ஒரு இடத்தில் உள்ள நிலம் அப்படியே காணாமல் போவது எவ்வளவு பெரிய வேதனை என்பதை இந்த காட்சியை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. கன மழை தொடரும் என எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

    English summary
    Landslide occurred today in the Emerald area of ​​the Nilgiris district. Meanwhile 335 mm rain lashes in Cuddalore overnight. The rain has poured down. Many more areas were submerged. More than a hundred houses were damaged in the rain. Trees are uprooted in more than 150 places. On the third day the power was cut off and all areas in Nilgiris were plunged into darkness.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X