நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கவர்னர் மாளிகை அருகே.. டய்ங் டய்ங்னு ஆடி அசைந்து போன சிறுத்தை..அடித்து பிடித்து ஓடிய மக்கள்!

ஊட்டி கவர்னர் மாளிகை அருகே காயம்பட்ட சிறுத்தை மீட்கப்பட்டது

Google Oneindia Tamil News

ஊட்டி: காலங்காத்தால ஊட்டி கவர்னர் பங்களா அருகில் ஒரு சிறுத்தை நடந்து போவதை பார்த்ததும் மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. இதனால் ஊட்டியே இன்று பரபரப்பாகிவிட்டது!!
நீலகிரியில் வனப்பகுதிகள் நிறைய உள்ளன.. ஊட்டியை சுற்றிலும் இந்த காட்டு பகுதிகளும் உண்டு.. இதனால் இரை தேடி ஊருக்குள்ளும், பக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள்ளும் அடிக்கடி சிறுத்தை, காட்டெருமைகள், யானைகள் வந்துவிடுவது உண்டு.

 lockdown: leopard rescued safely in ooty botanical garden

இப்போது ஊரடங்கு என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாகிவிடவும், இந்த விலங்குகளின் நடமாட்டம் சற்று பெருகிவிட்டது.அந்த வகையில், ஊட்டி கவர்னர் மாளிகையில் ஒரு சிறுத்தையை இன்று காலை அப்பகுதி மக்கள் பார்த்தனர்..

 lockdown: leopard rescued safely in ooty botanical garden

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில்தான் ஆளுநர் பங்களா இருக்கிறது.. இந்த பூங்காவிலேயே ஊழியர்களின் குடியிருப்பு பகுதியும் உள்ளது. இங்குதான் ஒரு சிறுத்தையை பார்த்து அலறி அடித்து ஓடினர்..

 lockdown: leopard rescued safely in ooty botanical garden

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் தந்தனர்.. அவர்கள் விரைந்து வந்தபோது, ரோட்டில் நடந்து வந்த சிறுத்தை ஒருகட்டத்துக்கு மேல் நடக்க முடியாமல் அங்கேயே ஒரு ஓரமாக சோர்ந்துபோய் படுத்துவிட்டதை பார்த்தனர்.. அப்போதுதான் அருகில் சென்று பார்த்தபோது சிறுத்தையின் காலில் அடிபட்டு இருந்தது.. ரத்த காயங்கள் கிடந்தன.. எப்படி இந்த பக்கம் வந்தது, எதனால் இந்த காயம் ஏற்பட்டது என தெரியவில்லை.

 lockdown: leopard rescued safely in ooty botanical garden

வலி அதிகமாக இருக்கவும் சுருண்டு படுத்திருந்தது. இதையடுத்து பல மணி நேரம் போராடி அந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். அந்த ஆண் சிறுத்தைக்கு 6 வயது இருக்கும் என்கிறார்கள்.. பிறகு உடனடியாக சிறுத்தையை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.. இதனிடையே கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

ஆம்பன் புயல் எதிரொலி.. புதுச்சேரியில் கடல் சீற்றம்.. புயல் எச்சரிக்கைக் கூண்டு ஆம்பன் புயல் எதிரொலி.. புதுச்சேரியில் கடல் சீற்றம்.. புயல் எச்சரிக்கைக் கூண்டு

ஆனால் அவர்கள் வர தாமதமானது.. இதனால் சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.. பிறகு வனத்துறை ஊழியர்களே கவச உடைகளை அணிந்து, சுருக்கு கம்பிகளை கையாண்டு சிறுத்தையை பிடித்து, வண்டியில் ஏற்றி, கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுத்தைக்கு உடனடி சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. குணமடைந்த பிறகு காட்டில் கொண்டு போய் விட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஊட்டியில் சிறுத்தையை பார்த்த கிலி மக்களுக்கு இன்னும் அகலவில்லை.

English summary
lockdown: leopard rescued safely in ooty botanical garden
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X