நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. அட குடையை எடு, குவார்ட்டரை பிடி.. அசரடித்த ஊட்டி குடிமகன்கள்

கொட்டும் மழையிலும் மது வாங்கி சென்றனர் ஊட்டி குடிமகன்கள்

Google Oneindia Tamil News

ஊட்டி: குடை பிடித்து கொண்டு வந்தால்தான் சரக்கு என்று திருப்பூர் மாவட்டத்தில் சொல்லப்பட்டது.. சமூக விலகலை கடைப்பிடிக்க இதை அறிவித்திருந்தாலும், ஊட்டியில் நிஜமாகவே எல்லாரும் குடையுடன்தான் நின்று மது வாங்கி கொண்டு போனார்கள்... வெளுத்த மழையிலும் சளைக்காமல் நின்று சரக்கை வாங்கி கொண்டு போனார்கள்!!

நீலகிரி மாவட்டம் மலை பிரதேசம் என்பதால், குடிமகன்கள் இயல்பாவே அதிகமாக இருப்பவர்கள்.. ஊரடங்கு பொது உத்தரவு வருவதற்கு முன்னேயே நீலகிரி இழுத்து மூடப்பட்டு விட்டது.

அதேபோல உள்ளளூரிலும் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் தவித்து போய்விட்டனர்.. எங்கெங்கோ மதுபானங்களை தேடி அலைந்தனர்.

பண்டிகை நாள் வசூலை தாண்டும்.. ரெக்கார்ட் வைக்க போகுது.. பெரிய வருமானத்தை எதிர்நோக்கும் டாஸ்மாக்! பண்டிகை நாள் வசூலை தாண்டும்.. ரெக்கார்ட் வைக்க போகுது.. பெரிய வருமானத்தை எதிர்நோக்கும் டாஸ்மாக்!

ஊட்டி

ஊட்டி

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் குடோனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.. இது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. அதேபோல, 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என்பதும் மீண்டும் சோர்ந்து போய்விட்டனர்.. இந்நிலையில்தான், இன்றைய தினம் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

குடோன்கள்

குடோன்கள்

எப்படியும் பல நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்படுவதால் கூட்டம் வழிந்துநிறையும் என்பதால் குடோனுக்கு மாற்றப்பட்ட மதுபானங்களை திரும்பவும் மதுக்கடைகளுக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டது.. காலையிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.. குடிமகன்கள் சமூ இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு ஏற்றவாறு கம்புகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டன. 6 அடிக்கு இடைவெளியிட்டு சதுரம், வட்டம் என வடிவங்கள் போடப்பட்டன.

கடைகள்

கடைகள்

கிருமிநாசினியை அந்த பகுதிகளில் தெளித்து கொண்டே இருந்தனர்... காலையில் மொத்தம் 63 மதுக்கடைகள் திறக்கப்பட்டன.. ஒரு கடையில் 350 முதல் 400 பெட்டிகளில் மது வகைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி சென்றனர்.

குன்னூர்

குன்னூர்

குன்னூரிலும் மக்கள் வரிசையாக நின்றனர்... கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசை கட்டி நின்றனர்.. இவர்கள் போதுமான சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை.. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவர்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் அந்த நேரத்தில் இல்லாததால் பெரும் சிரமம் ஏற்பட்டது..

வெள்ள நீர்

வெள்ள நீர்

அதேபோல, ஊட்டியில் வரிசையில் நிற்கும்போது திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. ஆனால் நம் குடிமகன்கள் மழை, வெயிலுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதால் வீட்டிலிருந்து கிளம்பி வரும்போதே குடையுடன்தான் வந்திருந்தனர்.. கிட்டதட்ட 2 மணி நேரத்துக்கு மழை விடாமல் பெய்தது.. ஊட்டி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.. இதனால் குடியுடன் குடிமகன்கள் "தண்ணீரிலேயே" பத்திரமாக வீடு வந்து சேர்ந்தனர்!!

English summary
lockdown: tasmac shops open at nilgiri district with socials distance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X