நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊட்டி போறீங்களா... ஒரு சந்தோஷமான செய்தி!

Google Oneindia Tamil News

உதகை: கோடை விடுமுறையை முன்னிட்டு உதகை மலை ரயிலில் கூடுதல் இருக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

உலக புகழ் பெற்றது ஊட்டி மலை ரயில் பயணம். இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதகை மலை ரயில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய ரயில் சேவையாகும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே, மலை ரயிலில் பயணிக்க தவறுவதில்லை.

 அமெரிக்காவில் ரெடியான அதிநவீன அப்பாச்சி கார்டியன்.. இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு அமெரிக்காவில் ரெடியான அதிநவீன அப்பாச்சி கார்டியன்.. இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு

பயணிகள் ஏமாற்றம்

பயணிகள் ஏமாற்றம்

குலுங்கி குலுங்கி செல்லும் மலை ரயிலில் பயணித்தப்படி இயற்கையின் கொஞ்சும் அழகை கண்டு ரசிப்பது அலாதி இன்பம்தான். ஆனால் கோடை விடுமுறையை கொண்டாட ஊட்டி செல்லும் மக்கள் உதகை மலை ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்ததை கேட்டு ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

கூடுதல் இருக்கைகள்

கூடுதல் இருக்கைகள்

இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி, நீலகிரி மலை ரயிலில் கூடுதல் இருக்கைகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

பயணச்சீட்டு

பயணச்சீட்டு

தற்போது கோடை விடுமுறை என்பதால், மலை ரயிலில் பயணிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு கிடைக்காமல் பலர் ஏமாற்றமடைகின்றனர்.

இருக்கைகள் இணைப்பு

இருக்கைகள் இணைப்பு

சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை போக்க, ரயிலில் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கூடுதல் இருக்கைகள் இணைக்கப்பட்டு மலை ரயில் இயக்கப்படுகிறது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த கூடுதல் இருக்கை வசதி, அடுத்த மாதம் 15ம் தேதி வரை நீடிக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலை ரயிலில் இருக்கைகள் கூட்டப்பட்டுள்ள தகவலால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
Seats have been added in Ooty Mountain rail due to summer holidays.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X