• search
நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திறந்து விட்டாச்சு.. இ-பாஸ் கட்டாயம்.. மனங்களில் "பாலை வார்த்த" கலெக்டர் திவ்யா.. பூரிப்பில் நீலகிரி

Google Oneindia Tamil News

நீலகிரி: வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வர இ -பாஸ் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்... அதேசமயம், அரசு அனுமதி கிடைத்ததும் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்றும் ஒரு நல்ல செய்தியை கலெக்டர் திவ்யா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் அதிக கட்டுப்பாட்டுடன் நீலகிரி செயல்பட்டது.. மலை மாவட்டம் என்பதாலும், கேரளா, கர்நாடக எல்லையில் உள்ளதாலும், ஆரம்பத்தில் இருந்தே தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்தது.

ஆனால், கோயம்பேட்டை திறந்து விட்டுவிடவும் நீலகிரியில் திடீரென தொற்று எகிறியது.. ஆனாலும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மேற்கொண்ட அதிரடிகள், ஆய்வுகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. ஒரு இடத்தில் நிற்க மாட்டார்.. காரை எடுத்து கொண்டு ரவுண்ட்ஸ் செல்வார்.. மார்க்கெட்டுகள், உழவர் சந்தை என மொத்த இடங்களிலும் ஆய்வு செய்தார்.

ஸ்டாலினிடம் சபாஷ்.. கெத்து காட்டும் கலெக்டர் திவ்யா.. கிராமப்புறங்களிலும் தடுப்பூசி.. மாஸ் நீலகிரி ஸ்டாலினிடம் சபாஷ்.. கெத்து காட்டும் கலெக்டர் திவ்யா.. கிராமப்புறங்களிலும் தடுப்பூசி.. மாஸ் நீலகிரி

கெடுபிடி

கெடுபிடி

யாரெல்லாம் மாஸ்க் போடலையோ, அவர்களை கூப்பிட்டு சத்தம் போடுவார்.. கடைகளுக்கு வெளியே பிளீச்சிங் பவுடர், தெளிக்க சொல்வார்.. இல்லாவிட்டால் அந்த கடையை இழுத்து மூடுங்க என்று உடனிருக்கும் அதிகாரிகளுக்கு ஆர்டர் போடுவார்.. அதனால் கலெக்டர் வருவதை தூரமாக பார்த்தாலே, விதிகளை மீறும் பலருக்கு நடுக்கம் வந்துவிடும்.

தொற்று

தொற்று

இப்படித்தான் கடந்த வருடம் தொற்று மாயமாகி போனது.. அதுபோலவே இந்த முறையும் விழிப்பாகவே செயல்பட்டது மாவட்ட நிர்வாகம்.. ஆனால், கோவை உட்பட பல கொங்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகிவிடவும், நீலகிரியும் பாதிக்கப்பட்டுவிட்டது.. ஒருநாளைக்கு 500-க்கும் மேல் கேஸ்கள் எகிறியது.. எனவே, இந்த முறையும் சுழன்று சுழன்று வேலை பார்த்தார் திவ்யா.. இங்குள்ள ஏராளமான பழங்குடி கிராமங்களுக்கு சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன..

வேக்சின்

வேக்சின்

ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு பகுதியில் இருக்கும்.. அவ்வளவு எளிதாக செல்ல முடியாது.. ஆனாலும், சிரத்தையுடன் மேற்கொண்டு கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலேயே அனைத்து பழங்குடியின மக்களும் 100 சதவீதம், வேக்சின் போட்டுக்கொண்ட ஒரே மாவட்டமாக நீலகிரி கெத்து காட்டி உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் இதற்கு பாராட்டு தெரிவித்து, கலெக்டருக்கு விருதும் தந்துள்ளார்.

இ-பதிவு

இ-பதிவு

இப்படிப்பட்ட சூழலில், இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. எனவே, வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வர இ -பாஸ் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்... ஒவ்வொரு முறை லாக்டவுன் போடும்போது, தமிழக அரசு அமல்படுத்திய இ-பதிவு முறையை தவறாக பயன்படுத்தி வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தினர் நீலகிரிக்கு வந்தனர்..

நீலகிரி

நீலகிரி

தொற்று அதிகமாக ஏற்பட இதுவும் ஒரு காரணமாக இருந்தது. அதனால்தான், நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இ-பதிவு முறைக்கு பதிலாக இ-பாஸ் முறையை திரும்பவும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இப்போது, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வர இ -பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

நீலகிரி

நீலகிரி

அதுமட்டுமல்ல, அரசு அனுமதி கிடைத்ததும் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்றும் கலெக்டர் திவ்யா தெரிவித்துள்ளார்.. நீலகிரியை பொறுத்தவரை சீசனில்தான் மொத்த வருமானமும்.. இதை நம்பித்தான் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் உள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த 2 வருடமாகவே சீசன் நடத்தப்படவில்லை.. தொழில்கள் முடங்கிவிட்டன.. வியாபாரிகள் பெரும் அவதியில் உள்ளனர்.. வருமானத்துக்கு வழியில்லாமல் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், விரைவில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்று கலெக்டர் சொல்லிஉள்ளது, மலை மாவட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது..!

English summary
Collector Divya has announced that e-pass is mandatory to come to Nilgiris
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X