நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் இருந்து ஊட்டி வந்தார்.. 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட திமுக எம்பி ஆ ராசா

Google Oneindia Tamil News

நீலகிரி: டெல்லியிலிருந்து ஊட்டிக்கு வந்த திமுக எம்பி ஆ ராசா, தன்னைத்தானே 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் பொது போக்குவரத்து முடங்கியது. தற்போது இந்தியா முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு நிலை தொடங்கியுள்ளது.

Nilgiris DMK MP A Raja isolates himself in Ooty

இந்த நிலையில் டெல்லியில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திமுக எம்பி ஆ ராசாவால் தமிழகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து 1ஆம் தேதி முதல் பஸ், ரயில், விமான போக்குவரத்து நாடு முழுவதும் தொடங்கியது. இதையடுத்து நேற்று காலை விமானம் மூலம் ஆ ராசா எம்பி கோவைக்கு வந்தார். அங்கு அவர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெரியகுளத்தில் தனி அலுவலகம் திறந்த ஓ.பி.எஸ். தம்பி... குவியும் பார்வையாளர்கள்பெரியகுளத்தில் தனி அலுவலகம் திறந்த ஓ.பி.எஸ். தம்பி... குவியும் பார்வையாளர்கள்

பின்னர் காரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். வெளியூரில் இருந்து வந்ததால் அவர் தன்னைத் தானே 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதையடுத்து ஆ ராசா ஊட்டிக்கு வந்ததை அறிந்த சுகாதாரத் துறையினர் அவருக்கு காய்ச்சல் இருக்கிறதா என சோதனை செய்துவிட்டு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கரையும் ஒட்டினர்.

English summary
Nilgiris MP A Raja isolates himself for 7 days as he had come from Delhi to Ooty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X