நடுநடுங்கும் மக்கள்.. தேவன் எஸ்டேட்டில் என்ன நடக்கிறது?.. கடைசி நேரத்தில் எகிறிய புலி.. கூடலூர் ஷாக்
ஊட்டி: 3 நபர்களின் உயிர்களை பறித்த ஆட்கொல்லி புலியை பிடிக்கும் முயற்சியில் நீலகிரி வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்... அந்த புலியை பிடிக்கும் வரை மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவன் எஸ்டேட்... இந்த பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.. 52 வயதாகிறது.. இவர் ஒரு தோட்ட தொழிலாளி..
கடந்த 24ம் தேதி இவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்... அப்போது திடீரென வந்த ஒரு புலி இவரை கடித்து குதறி கொன்றுவிட்டது.. இதனால் கொந்தளித்த அந்த பகுதி மக்கள், புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
பரீட்சைக்கு நேரமாச்சு.. வேகமாக சென்ற மாணவி.. திடீரென வந்த புலி.. பீதியில் மாணவர்கள்

மயக்க ஊசி
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறை அதிகாரிகளும், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதாக மக்களுக்கு உறுதியளித்தனர்.. இதையடுத்து, புலி நடமாடும் பகுதிகளில் எல்லாம் கூண்டு வைக்கப்பட்டன.. அதேபோல சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டன.. பிறகு, வனத்துறையினர் புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.. நேற்று முதல் இந்த பணி தீவிரமாகி உள்ளது..

கண்காணிப்பு
அங்குள்ள ராட்சத மரங்களில் பரண் போல அமைத்து, அங்கிருந்து கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்... மேலும், கேரள மாநிலத்தில் இருந்து வந்துள்ள 15 பேர் கொண்ட குழு, பிரத்யேக உடை அணிந்து, வனப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகிறது. இந்த சூழலில்தான், மறுபடியும் ஒரு பசு மாட்டை அதே புலி தாக்கி கொன்றுள்ளது.. புல்லை மய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றதால், மக்கள் மேலும் பீதிக்கு ஆளானார்கள்..

கலெக்டர் திவ்யா
இதையடுத்து, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வையும் மேற்கொண்டார்.. வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்... இதை பற்றி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, புலியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்... மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் கால்நடை மருத்துவக்குழுவினர் தயாராக இருக்கிறார்கள்.. இருந்தாலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், புலியை பிடிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது..

நடவடிக்கை
அதனால் புலி பிடிபடும்வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்.. வெளியூர் மக்கள் வரக்கூடாது என்பதற்காகவே பஸ்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது... அதேசமயம், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... பொதுமக்கள் பயப்பட வேண்டாம்" என்று கூறியிருந்தார். இதனால் நேற்று முதலே பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்..

உணவு பொருட்கள்
தேயிலை தோட்ட வேலைகளுக்கும் தொழிலாளர்கள் செல்லவில்லை.. எனவே அனைத்து குடும்பங்களுக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்.. இப்படி அங்குள்ள 120 குடும்பங்களுக்கு, சுமார் ஒரு வாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.. நேற்று காலை மேபீல்டு தனியார் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை ஒட்டிய புதரில் புலி பதுங்கி இருப்பது தெரியவந்தது...

கலக்கம்
வனத்துறையினரும் அங்கு சென்று அந்த பகுதியை சுற்றி வளைப்பதற்குள் முட்புதரிலிருந்து வெளியே வந்த தேவன் எஸ்டேட் பகுதிக்குள் ஓடிவிட்டது.. இப்போது, தேவன் எஸ்டேட் பகுதியில் அந்த புலி சுற்றித்திரிந்தபோது நேரில் பார்த்ததாக சிலர் சொன்னதால், அங்கேயும் தேடுதல் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது... ஒருவேளை புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிட்டால், அதை வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது..