• search
நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லாட்ஜில் 53 வயது மாகி.. உடம்பெல்லாம் காயம்.. துணியால் சுற்றி தந்த எஸ்.ஐ.. நடுநடுங்கி போன ஊட்டி

Google Oneindia Tamil News

ஊட்டி: ஊட்டியில் கள்ளக்காதலியை கொலை செய்த போலீஸ்காரர் கைதாகி உள்ளார்.. இதையடுத்து, இந்த கொலை எப்படி நடந்தது? இந்த எஸ்ஐ எப்படி சிக்கினார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

ஊட்டி அருகே காந்தல் என்ற இடம் உள்ளது.. இங்குள்ள புதுநகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா.. இவர் ஒரு போலீஸ் எஸ்ஐ.. க்யூ பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மாகி என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.. மாகிக்கு 53 வயசாகிறது.. இவர்களின் கள்ளக்காதல் 15 வருஷமாகவே இருந்து வந்துள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை அறிவித்தது தமிழக அரசு! 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை அறிவித்தது தமிழக அரசு!

 சடலம்

சடலம்


இந்நிலையில், திடீரென மாகியின் குடும்பத்தினருக்கு முஸ்தபா போன் செய்து, மாகி இறந்துவிட்டதாக சொன்னார்.. மேலும் கொரோனாவால்தான் மாகி இறந்துவிட்டதால், தானே உடலை பத்திரமாக கொண்டு வந்து வீட்டில் ஒப்படைப்பதாகவும் சொன்னார். அதேன்படியே, காரில் கொண்டு சென்று மாகியின் உடலை வழங்கியுள்ளார்... துணியால் சுற்றி அந்த சடலத்தை தந்தார்..

காயங்கள்

காயங்கள்

அதனால் மாகியின் முகத்தை அப்போது தெளிவாக பார்க்க முடியவில்லை.. வீட்டிற்குள் கொண்டு சென்று, உடம்பில் சுற்றியிருந்த அந்த துணியை நீக்கி பார்த்தனர்.. அப்போது,மாகியின் முகம் உட்பட உடம்பெல்லாம் காயங்கள் இருந்தது தெரியவந்தது.. இதையடுத்து அதிர்ச்சியான உறவினர்கள், உடனடியாக ஊட்டி ஸ்டேஷனுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள்...

 கள்ளக்காதல்

கள்ளக்காதல்

தகவலறிந்து போலீசாரும் விரைந்து சென்று சடலத்தை பார்த்தபோது, அவர்களின் சந்தேகம் மேலும் அதிகமானது. உடனடியாக போஸ்ட் மார்ட்டத்துக்கும் மாகியின் சடலத்தை அனுப்பி வைத்து, போனில் தகவல் சொன்ன முஸ்தபாவை பிடித்து ரகசிய விசாரணையை நடத்தினர்.. அப்போதுதான் கள்ளக்காதல் விவகாரமும், தகராறு காரணமாகவே மாகியை அடித்து முஸ்தபா கொன்றதும் தெரியவந்தது..

 லாட்ஜ்

லாட்ஜ்

சம்பவத்தன்று, ஊட்டி பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள லாட்ஜுக்கு மாகியை முஸ்தபா அழைத்து சென்றுள்ளார்.. அங்கு இருவருமே தண்ணி அடித்துள்ளனர்.. அப்போதுதான் இருவருக்கும் தகராறு வந்துள்ளது.. அதில், மாகியை கண்மூடித்தனமாக தாக்கி அடித்துள்ளார் முஸ்தபா.. இதில் அளவுக்கு அதிகமான காயமடைந்தே மாகி துடிதுடித்தே உயிரைவிட்டது தெரியவந்துள்ளது. கைதான முஸ்தபாவிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

 டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

சமீபத்தில்தான் மாகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டு குணமாகி வீட்டுக்கு வந்திருக்கிறார்.. ஆனால், மாகியின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது, "மாகிக்கு மறுபடியும் தொற்று வந்துவிட்டது.. இதுகுறித்து வெளியே யார்கிட்டயும் சொல்ல வேணாம்.. உடனே போய் அடக்கம் பண்ணிடுங்க" என்று முஸ்தபா சொன்னாராம்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பொதுவாக, ஊட்டியில் குற்ற செயல்கள் அவ்வளவாக நடப்பதில்லை.. அதிலும் கொலை, பலாத்கார போன்ற கொடூரங்கள் குறைவாகவே நடக்கும்.. இந்நிலையில், ஊட்டியின் மையப்பகுதியிலேயே இப்படி ஒரு கொலையை, அதுவும் போலீஸ்காரரே அடித்து கொன்றுள்ளது மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.. இதனால், 2வது நாளாக குளிரையும் தாண்டி, அதிர்ச்சியில் ஊட்டி உறைந்து போயுள்ளது..!

English summary
Nilgiris Sub Inspector arrested under murder case inquiry going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X