நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரெல்லாம் இ பாஸ் ரத்து.. பஸ் ஓடுது.. ஹோட்டலும் இருக்கு.. ஆனால்.. இவங்க மட்டும் புலம்பறாங்களே!

இ பாஸ் ரத்து செய்தும் நீலகிரி மாவட்ட மக்கள் புலம்பி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

ஊட்டி: "பஸ் விட்டும் எங்களுக்கு பிரயோஜனம் இல்லையே.. கோயம்புத்தூருக்கு போககூட முடியல.. ஹோட்டல்களை திறக்க சொல்லியும் எந்த லாபமும் எங்களுக்கு இல்லை" என நீலகிரி மக்கள் புலம்பி தள்ளுகிறார்கள்.

Recommended Video

    தமிழகத்தில் 4 முக்கியமான தளர்வு, முதல்வர் பழனிசாமி அதிரடி

    நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வனத்துறை போன்றவை அனைத்துமே கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டுவிட்டது.. எந்த சுற்றுலா பயணிகளும் ஊட்டிக்கு வர கூடாது என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு விட்டது.

    இந்த சமயத்தில்தான், அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.. அதனால், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீலகிரிக்கு இ-பாஸ் வாங்கி வந்து கொண்டிருந்தனர்.. கிட்டத்தட்ட 2 ஆயிரக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டிக்கு வந்தனர்.. ஹோட்டல்கள், ரிசார்ட்களில் ரகசியமாகவும் ரூம் எடுத்து தங்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் தொற்று அதிகரிப்பு அதிகமாகிவிட்டது.

    திருச்சியில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்... குறைவான பயணிகள்... தனியார் பஸ்கள் ஓடவில்லை!! திருச்சியில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்... குறைவான பயணிகள்... தனியார் பஸ்கள் ஓடவில்லை!!

     இன்னசென்ட் திவ்யா

    இன்னசென்ட் திவ்யா

    எனவே மறுபடியும் கலெக்டர் திவ்யா கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்தார்.. எனினும், கடந்த 26-ந் தேதி முதல் எமர்ஜென்சி, கல்யாணம், போன்ற அவசிய, அவசர காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் தரப்பட்டு வந்த நிலையில்தான், தற்போது அனைவருக்கும் இ-பாஸ் இல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    அதேசமயத்தில், சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க, மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்றும் கூடுதலாக ஒரு அறிவிப்பு வெளியானது.

     இ-பாஸ்

    இ-பாஸ்

    அதாவது, நீலகிரியில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவை இல்லை. ஆனால், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி வருவதற்கு ஆன்லைன் மூலம் அப்ளை செய்து, கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.. ஒருவேளை இ-பாஸ் பெறாமல் வந்தால் கண்டிப்பாக யாராக இருந்தாலும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதனால் நீலகிரியே சற்று அதிர்ந்து போய் உள்ளது.. இதற்கு காரணம், "இபாஸ் ரத்து செய்வார்களாம்.. ஆனால் நீலகிரிக்கு கிடையாதாம்.. சுற்றுலாவை நம்பியே நாங்கள் பொழப்பை நடத்துகிறோம்.. காலம் காலமாக இப்படித்தான் நீலகிரி உள்ளது.. இதை நம்பி லட்சக்கணக்கான வியாபாரிகள்,, ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் உள்ளனர்.

    சீசன்கள்

    சீசன்கள்

    இதை நம்பிதான் லாட்ஜ்கள், காட்டேஜ்கள் செயல்படுகின்றன.. துணிக்கடை, பேக்கரி, ஹோட்டல்கள், இப்படி எல்லாமே சுற்றுலாவையே சுற்றி சுற்றிதான் வருகிறது. ஏற்கனவே 5 மாதமாக கையில் காசு இல்லாமல் இருக்கிறோம்.. ஒவ்வொரு முறையும் சீசனில் சம்பாதிப்பதுதான் எங்களுக்கு வருமானம்..அதுகூட இந்த முறை இல்லை.. இவ்வளவு நாள் கழித்து இ-பாஸ் ரத்தானாலும் நீலகிரிக்கு மட்டும் விதிவிலக்கு என்பது ஏற்க முடியாது.. இதை தயவுசெய்து ரத்து செய்ய வேண்டும்" என்று மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

     கிராம மக்கள்

    கிராம மக்கள்

    அதேபோல, இன்று முதல் பஸ்கள் ஓட தொடங்கிய நிலையில், எந்த பஸ்ஸிலும் கூட்டமே இல்லை.. பக்கத்து பக்கத்து கிராமங்களுக்கு பஸ்கள் காலை முதல் ஓடிவருகிறது.. ஆனால், மக்கள் பயணம் செய்வது குறைவாகவே உள்ளது.. கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு வருவதெல்லாம் அசால்ட்டாக நடந்து வந்த ஒன்று.. அதுவும் தற்போது தடை பட்டுள்ளது.

     தொற்று பாதிப்பு

    தொற்று பாதிப்பு

    தொற்று வந்துவிடும் என்று பயந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது வரவேற்கிறோம்.. ஆனால், ஹோட்டல்களை திறந்து வைப்பது யாரால்? எதற்கு? வேண்டுமானால் சுற்றுலா தளங்களை மூடி விடட்டும்.. சுற்றுலா பயணிகள் வரட்டுமே.. அவர்கள் வந்து இயற்கையை அனுபவிக்கட்டுமே.. கிளைமேட்டை ரசித்து செல்லட்டும்.. அப்போதாவது ஹோட்டல்களில் வந்து தங்க முடியும்.. எங்களுக்கும் உபயோகமா இருக்கும்" என்கிறார்கள் ஹோட்டல் தரப்பினர்.

    தமிழகமே இ-பாஸ் ரத்தாகி சந்தோஷமாக இருக்கும்போது, நீலகிரி, கொடைக்கானல் மட்டும் சோகத்தில் சிக்கி வருகிறது!

    English summary
    E pass still in function in Nilgiris
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X