நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊட்டியில் ஓபிஎஸ்.. பேரன் பள்ளி விழாவுக்கு விசிட்.. கோஷ்டி பூசலையும் சமாளித்தார்.. செம பரபரப்பு!

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று நீலகிரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Google Oneindia Tamil News

ஊட்டி: ஒரேநாள் தான் ஊட்டி பக்கம் வந்தார் ஓபிஎஸ்.. அதற்குள் தாறுமாறான சம்பவங்களால் படு அமர்க்களமாகி விட்டது!

முதலில் மகனுக்காக பிரச்சாரம் செய்துவிட்டு, பிறகுதான் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அதன்படி நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கும் தியாகராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நேற்று இரவு ஊட்டி வந்தார் துணை முதல்வர். சுலைவன் கோர்ட் என்ற ஹோட்டலில் தங்கினார். இன்று காலை 8 மணி இருக்கும். தங்கியிருந்த அந்த ஹோட்டல் முன்பு ஏராளமான அதிமுகவினர் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.

அனல் பறக்கிறது பிரச்சாரம்.. கூகுள் தளங்களில் தேர்தல் விளம்பரம்... பாஜக முதலிடம் அனல் பறக்கிறது பிரச்சாரம்.. கூகுள் தளங்களில் தேர்தல் விளம்பரம்... பாஜக முதலிடம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

நீலகிரியில் அதிமுக இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் ஒரு கோஷ்டியாகவும், எம்பி அர்ச்சுணன் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் அர்ச்சுணன் கோஷ்டியினர் புத்திசந்திரனுக்கு எதிராக திரண்டுதான் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சமாதானம்

சமாதானம்

இதையடுத்து அந்த இடமே பரபரப்பாகி விட்டது. உடனடியாக இதுகுறித்து ஓட்டல் அறையில் இருந்த ஓபிஎஸ்-க்கு தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அனைவரையும் ஓபிஎஸ் அழைத்து பேசி சமாதானம் செய்தார். இதன்பிறகு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

காத்திருப்பு

காத்திருப்பு

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியும் ஓபிஎஸ் 10 மணிக்கு வந்துவிடுவார் என்பதால் நிறைய மக்கள் கூட ஆரம்பித்தார்கள். காலை 9 மணி முதலே முதல் கடும் வெயிலில் காத்திருந்தனர். ஆனால் ஓபிஎஸ் வரவே இல்லை.

 பேரன்

பேரன்

கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது ஆனால், 12.15 மணி வரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை.ஓட்டலில் காலை டிபனை முடித்து கொண்டு நேராக தனது பேரனை பார்க்க கிளம்பி சென்றார். ஓபிஎஸ் பேரன் ஊட்டி அருகே பாலாடாவில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். அந்த பள்ளியின் விளையாட்டு விழாவிலும் ஓபிஎஸ் பங்கேற்றார். அதன்பின்னர்தான் கிளம்பி சென்றார். அதற்குள் மதியம் 12.30 மணி ஆகிவிட்டது.

 வேன் கவிழ்ந்தது

வேன் கவிழ்ந்தது

காலை 9 முதல் மதியம் வரை கால்கடுக்க மக்கள் காத்து நின்றதால் கடும் எரிச்சல் அடைந்தனர். இதில், கூடலூர் அருகே வாகனங்களுடன் சென்று கொண்டிருக்கும்போதுதான், ஓபிஎஸ் பிரசாரத்திற்கு பயன்படுத்தவிருந்த வேன் கவிழ்ந்து விபத்து நடந்து.. அந்த இடமும் களேபரமாகிவிட்டது! ஆக மொத்தம் ஓபிஎஸ்-ன் ஊட்டி ட்ரிப் செம பரபரப்புதான்!

English summary
Dy CM O Panneerselvam campaigned in Nilgiris today. But People were dissatisfied because they had long been waiting for OPS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X