நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வாங்க.. வாங்க.. ஆனால் ஒரு மணி நேரம்தான்".. மகிழ்ச்சியுடன் வரவேற்கும் ஊட்டி.. கார்டன் பூக்கள் ஹேப்பி

Google Oneindia Tamil News

ஊட்டி: "நான் வாடும் முன்னே வாருங்களேன்" என்று ஏங்கி ஏங்கி தவித்த ரோஜா பூக்கள், இன்று பூத்து குலுங்கி மகிழ்ந்து உள்ளன.. "வாங்க.. வாங்க.. ஆனால் ஒரு மணி நேரம்தான்" என்று ஊட்டியில் உள்ள பூங்காக்களின் மலர்கள் சுற்றுலா பயணிகளுக்கு புன்னகையால் அழைப்பு விடுத்து வருகின்றன.. ஆம் இன்றுமுதல் நீலகிரியில் மூடப்பட்டிருந்த அனைத்து பூங்காக்களும் திறக்கப்பட்டுவிட்டன!

வழக்கமாக மே மாதம் ஊட்டியில் சீசன் ஆரம்பிக்கும்.. உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என நாலா பக்கமிருந்தும் திரண்டு வருவார்கள் இந்த சீசனுக்கு.

இதற்காக ஏப்ரல் மாதமே களை கட்ட தொடங்கிவிடும்.. அந்த 3 மாதங்களுக்கு ரோட்டில் கால் வைக்க இடமிருக்காது.. டிராபிக் ஒரு பக்கம், டூரிஸ்ட்கள் மறுபக்கம் என சேர்ந்து நெருக்கி தள்ளும் ஊட்டியை!

கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் ஜில் அறிவிப்பு கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் ஜில் அறிவிப்பு

சீசன்

சீசன்

ஆனால் கடந்த சில மாசமாகவே எல்லாமே தலைகீழாகிவிட்டது.. லாக்டவுன் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.. நாலாபக்கமும் நீலகிரி இழுத்து பூட்டப்பட்டது.. இதனால் மலை மாவட்ட மக்கள் நொந்து போய்விட்டனர்.. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

 ரோஜா பூங்கா

ரோஜா பூங்கா

தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடக்கவிருந்த மலர்க்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் பிப்ரவரி மாசமே ஜரூராக ஆரம்பமானது பிப்ரவரி மாதம் விதை போட்டு வளர்க்க ஆரம்பித்தால் மே மாத சீசனுக்குள் அனைத்து பூக்களும் கட்டாயம் குலுங்கி சிரிக்கும்.. ஆனால், பிளவர் ஷோ இந்த முறை நடத்தப்படவில்லை.. .. மலர்கள் வாடி வாடி உதிர்ந்தன! ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பார்க் போன்றவை இழுத்து பூட்டப்பட்டன.

 அறிவிப்பு

அறிவிப்பு

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கீழுள்ள பூங்காக்கள் மொத்தமும் இன்று திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே கூறியிருந்தது... அதன்படியே இன்று அனைத்தும் கடந்த 6 மாசத்திற்கு பிறகு திறக்கப்பட்டன.

 சேனடைசர்

சேனடைசர்

தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.. பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் கைகளை சுத்தப்படுத்தி கொள்ள சேனடைசர் வைக்கப்பட்டுள்ளது.. அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.. இதையடுத்து, தோட்டக்கலை துறை சார்பில் மலர் கொடுத்து சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு தரப்பட்டது. எல்லாருமே மாஸ்க் போட்டிருந்தனர்.. இப்போதைக்கு இந்த தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சொல்லும்போது, "நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவிற்கான இ பாஸ் முதலில் விண்ணப்பிக்கும் 50 நபர்களுக்கு வழங்கப்படும்.. பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகள் ஒருமணி நேரம் மட்டுமே இருக்க முடியும்.. 200 நபர்கள் மட்டுமே பூங்காக்களை சுற்றி பார்க்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.. இந்த 6 மாசமாக எல்லா வாழ்வாதாரத்தையும் இழந்த உள்ளூர் மக்களும் தொழிலாளர்களும் மலர்ந்த பூக்களுடன் சேர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்!

English summary
Ooty Botanical gardens opened after 6 months today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X