நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம மேக மூட்டம்.. சாரல் மழை வேற.. ரோடே தெரியல.. ஊட்டி மலைப்பாதையில் உஷாரா வண்டி ஓட்டுங்க

Google Oneindia Tamil News

நீலகிரி: ஊட்டியிலிருந்து பல பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் கடும் மேகமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

Recommended Video

    ஊட்டி மலைப்பாதைகளில் கடும் மேக மூட்டம், சாரல் மழை.. வாகன ஓட்டிகளே கவனம் தேவை! - வீடியோ

    கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி ,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய, சாரல் மழை பெய்து வந்தது. இதனால் கடும் குளிரும் நிலவியது.

    Ooty weather today: Cloud cover on the roads due to rain

    தற்போது வரை பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் உதகையில் இருந்து, கூடலூர் செல்லும் சாலை மற்றும் சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகளில் கடும் மேகமூட்டம் காணப்படுகிறது.

    குறிப்பாக வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகள் என்பதால் கடும் மேகமூட்டம் காணப்படுவதோடு வாகன ஓட்டிகள் அவதியுற்று வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    சாலைகளில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கை இட்டு செல்கின்றன. கடும் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மலைப் பகுதியில் மழையும் பெய்து வெள்ள நீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மெல்ல மெல்ல வாகனங்களை இயக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    English summary
    Motorists are can't drive fast due to heavy cloud cover on the roads leading from Ooty to many places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X