நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வந்துடும்.. தள்ளி நில்லு.. கிண்டல் செய்த போண்டா மாஸ்டர்.. குத்தி கொன்ற நபர்.. ஷாக்கில் ஊட்டி

ஊட்டியில் போண்டா மாஸ்டர் குத்தி கொலை செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

ஊட்டி: "கொரோனா வந்துடும்.. தள்ளி நில்லு" என்று கிண்டல் செய்த போண்டா மாஸ்டரை கத்தியாலேயே குத்தி கொன்றுவிட்டார் ஒருவர்.. இந்த கொடுமை ஊட்டியில் நடந்துள்ளது!

144 உத்தரவு என்று சொல்லிவிடவும், மொத்த ஊட்டியும் பொருட்களை மார்க்கெட்களில் வாங்கி குவித்த நேரம்.. பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது சாலைகள்.. கவனத்துக்கு வந்த பொருட்களை எல்லாம் வாங்கி விட வேண்டும் என்ற மும்முரத்தில் பொதுமக்கள் பிஸியாக இருந்தனர்.

இந்த சமயத்தில், ஊட்டி B.1 போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு டீ கடை உள்ளது.. பார்ப்பதற்கு டீ கடை என்றாலும் சாப்பிடுவதற்கு வர்க்கி, மீன்வறுவல், போண்டோ என சுடச்சுட போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

ஜோதிமணி

ஜோதிமணி

மார்க்கெட் பகுதி என்பதால், அங்கிருக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் இங்குதான் டீ, வடை, மீன்வறுவல் சாப்பிட்டு போவது வழக்கம்.. அப்படித்தான் ஜோதிமணியும் அவரது நண்பரும் டீக்கடைக்கு வந்தனர்.. இருவருமே தொழிலாளிகள்தான்.. ஊட்டியில் உள்ள நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி.. 35 வயதாகிறது.. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.. பசி காரணமாக மீன் வறுவலை சுடச்சுட சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார்.

தேவதாஸ்

தேவதாஸ்

அப்போது டீக்கடையில் போண்டா மாஸ்டர் தேவதாஸ் இருந்தார்.. மீன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜோதிமணி தேவதாஸைப் பார்த்து... `கொரோனா வைரஸ் வருது... தள்ளி நில்' என கிண்டலாக சொன்னார். இதைக்கேட்டதும் தேவதாசுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.. அதனால் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து ஜோதிமணியின் கழுத்தில் ஓங்கி குத்தினார். கழுத்தில் ரத்தம் பீறிட்டு கொட்டி அங்கேயே விழுந்து இறந்தார் ஜோதிமணி!

புகார்

புகார்

இதை பார்த்ததும் மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. பக்கத்திலேயே ஸ்டேஷன் என்பதால் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. தேவதாஸை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

வெங்காயம்

வெங்காயம்

இதை பற்றி நாம் விசாரித்ததற்கு, "ஜோதிமணி டீக்கடைக்கு அடிக்கடி வந்து நெருக்கமாக பழகுபவர்.. வெங்காயத்தை வெட்டிவிட்டு, அப்போதுதான் டேபிள் மேலேயே கத்தியை வைத்திருந்தார் தேவதாஸ்.. அந்த கத்தியை எடுத்துதான் தேவதாஸ் குத்திவிட்டார்.. இத்தனைக்கும் ஜோதிமணியும் - தேவதாசும் நண்பர்கள்.. இந்த கடைக்குதான் 2 பேருமே வந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள்.. கொரோனா வந்துடும் தள்ளி நில்லு என்று சொன்னதும் தேவாசுக்கு கோபம் வந்துவிட்டது.

கொரோனா

கொரோனா

ஏனென்றால் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு.. தள்ளி நில்லு என்று தேவதாஸ் சொல்லவும், நான் ஏன் தள்ளி நிக்கணும்.. உங்க மாநிலத்தில்தான் கொரோனா அதிகம் என்று சொல்லி இருக்கிறார் ஜோதிமணி.. இதில்தான் ஆத்திரம் வந்து கத்தியை எடுத்து குத்திவிட்டார்.. இப்படி ஒரு செகண்டில் குத்தி எங்கள் கண்முன்னாடியே கொலை விழும் என்ற நாங்கள் சத்தியமாக நினைக்கவில்லை என்று சக தொழிலாளர்கள் அதிர்ச்சி விலகாமல் கண்ணீர் வடித்து சொன்னார்கள். கொரோனா வைரஸ் உயிரை பறிக்கும் என்ற பயத்திலேயே இந்த கொலையும் நடந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.

English summary
ooty worker murder due to coronavirus issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X