நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூபிணியின் மறுரூபம்.. வலையில் விழ வைத்த மோசடி.. ஊட்டி போலீஸ் அதிரடி.. இப்போ ஜெயிலில் 1,2,3..!

மோசடி புகாரில் பொள்ளாச்சி பெண் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

ஊட்டி: ரூபிணிக்கு ரொம்பவே பணத்தாசை.. அப்பாவி மக்களை ஏமாற்றி கடன் தருவதாக சொல்லி.. லட்சக்கணக்கில் வாரி சுருட்டி உள்ளார்... இப்போது கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஊட்டி எஸ்பி ஆபீசில் ஒரு கும்பல் திரண்டு வந்தது.. ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும் காணப்பட்ட அவர்கள், கையில் ஒரு மனு கொண்டு வந்திருந்தனர்.

அதில், "கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட சிலர், டிரஸ்ட் நடத்துவதாக எங்களிடம் சொல்லி, வீடுகள் கட்டுவதற்கும், கல்யாணம் நடத்துவதற்கும் கடன் தருகிறோம்... முன் பணம் மட்டும் தந்தால் போதும், கடன் தருகிறோம் என்றார்.

"ஓ.. என் மேலயே கை வெக்கறியா".. குடிபோதையில் போலீஸை அடித்த நடிகை பாபிலோனாவின் தம்பி.. அதிரடி கைது

முன்பணம்

முன்பணம்

ஆனால் நீண்ட நாட்களாகியும், கடன் வழங்கவில்லை.. கொடுத்த முன் பணத்தையும் திருப்பி தரவில்லை.. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதையடுத்து இதன்பேரில் உடனடி விசாரணை ஆரம்பமானது..

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

அப்போதுதான் ரூபிணியின் பல ரூபங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.. பொள்ளாச்சி வடக்கிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரூபிணி பிரியா.. 29 வயது ஆகிறது.. "வீடு கட்ட கடன் தருகிறோம், அதற்கு முன்பணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை தந்தால் போதும்" என்றுதான் பேச்சையே ஆரம்பிப்பாராம்.. இதை நம்பி பலரும் பணத்தை கொண்டுபோய் கட்டி உள்ளனர். தான் டிரஸ்ட் வைத்திருப்பதாக சொல்லி தான் இவர் மக்களை நெருங்கி உள்ளார்.. ஆனால் அது போலியான டிரஸ்ட் என்பது தெரியவந்துள்ளது..

நம்பினர்

நம்பினர்

பொள்ளாச்சியில் ஆரம்பித்த மோசடி ஊட்டி மக்கள் வரை வந்துள்ளது.. பல பேர் ரூபிணி பேச்சில் நம்பி விழுந்துள்ளனர்.. இதற்காக சிவா, கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோரை ஏஜென்ட்டுகளாக ரூபிணி நியமித்துள்ளார் மொத்தம் 65 பேரிடம் பணமோசடி செய்துள்ளார்.. 18 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணத்தை ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு தகவலையும் திரட்டிய குற்றப்பிரிவு போலீசார் ரூபினி பிரியாவை பொள்ளாச்சியில் சென்று கைது செய்தனர். உடனிருந்த ஏஜென்ட்டுகளையும் போலீசார் தேடி வருகிறார்கள்..

கைது

கைது

இந்த ரூபிணி & கோ, வேறு பல இடங்களிலும் போலியான டிரஸ்ட் வைத்து மக்களை ஏமாற்றி உள்ளதாகவும் சொல்கிறார்கள். ரூபிணி கைது என்ற விஷயத்தை கேள்விப்பட்டதுமே பாதிக்கப்பட்ட மக்கள் ஊட்டி எஸ்பி ஆபீசுக்கு விரைந்து வந்தனர்.. ஆனால், கோர்ட் உதவியை நாடுமாறு போலீசார் அவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ரூபிணி.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்!

English summary
ooty police arrested pollachi woman rubini priya in cheating case and investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X