நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக மிக அதிக கனமழை : நீலகிரிக்கு மூன்றாவது நாளாக ரெட் - கோவை,தேனிக்கு ஆரஞ்ச்

மிக மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு மூன்றாவது நாளாக இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நீலகிரி: கொட்டித்தீர்த்த மழையால் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது நீலகிரி. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருகியுள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றுநாட்களாக நீலகிரியில் நீடிக்கும் தொடர் மழையால் கூடலூர், பந்தலூர், அவலாஞ்சி பகுதிகளில் மரங்கள் முறிந்தும் மின்கம்பங்கள் சாய்ந்தும் காணப்படுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு மூன்றாவது நாளாக இன்றும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை மாநிலத்தின் பல பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. நேற்றைய தினம் காலை 8 மணி நிலவரப்படி நீலகிரி அவலாஞ்சியில் 39 செமீ மழையும், மேல் பவானியில் 31, சின்னக்கல்லார், பந்தலுரில் 16 செமீ மழையும் பதிவாகியுள்ளது. நடுவட்டம், எமரால்டு பகுதிகளில் 15 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

Red alert issued to Nilgiris: Heavy rain warning

சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாகத் தென்மேற்கு பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவில் அதிகனமழையும், கோவை, தேனி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.

ராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரைராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை

திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், வேலுார், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழையும் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

70 கிமீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்று.. பேய் மழை.. மும்பை மக்களே வெளியில் போகாதீங்க! 70 கிமீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்று.. பேய் மழை.. மும்பை மக்களே வெளியில் போகாதீங்க!

Recommended Video

    Weather Update : வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி | Oneindia Tamil

    மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த மற்றும் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்குமீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். கேரள, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு, கோவா கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மத்திய, கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த, சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வரும் 9ஆம் தேதி வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    English summary
    Chennai Met office has issued Very heavy rain warning and a red alert to Nilgiris district. Nilgiris, districts surrounding it too are expected to get rains in the next few days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X