நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சயான், மனோஜ் ஜாமீன் ரத்தாகுமா?.. 8ம் தேதி ஊட்டி கோர்ட் தீர்ப்பு

சயான், மனோஜ் ஜாமீன் மீதான விசாரணையை ஊட்டி கோர்ட் தள்ளி வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

ஊட்டி: கொடநாடு விவகாரத்தில் கைதாகி உள்ள சயான், மனோஜ் இருவரின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கின் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு உதகை மாவட்ட கோர்ட் நீதிபதி ஒத்தி வைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து விட்டு விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ‌சயான், மனோஜ் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இதில், ‌சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த ஜாமீன் வரும் 2-ம் தேதி வரை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் மனு

அரசு தரப்பில் மனு

ஆனால் இவர்கள் 2 பேரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று ஆஜர்

இன்று ஆஜர்

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை, ‌சயான், மனோஜ் இருவரும் வருகிற 29-ந்தேதி அதாவது இன்றைய தினம் ‌சயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

ஒத்தி வைப்பு

ஒத்தி வைப்பு

அதன்படி, கடந்த 29-ம் தேதி இருவரும் ஆஜரான நிலையில், இந்த வழக்கின் விசாரணை 2-ம் தேதிக்கு அதாவது இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை மீண்டும் இருவரும் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது அரசு சார்பில் ஏ.நடராஜனும் எதிர் தரப்பு சார்பில் பிரபாகரனும் ஆஜராகி வாதாடினர்.

நீண்ட வாக்குவாதம்

நீண்ட வாக்குவாதம்

சயான், மனோஜ் ஆகியோர் ஊட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதையொட்டி அனைத்து அரசு தரப்பு வழக்கறிஞர்களும் முன்கூட்டியே ஆஜராகியிருந்தனர். அதேபோல, நீதிமன்ற வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

சயான், மனோஜ் ஆகியோர் ஊட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதையொட்டி அனைத்து அரசு தரப்பு வழக்குரைஞர்களும் முன்கூட்டியே ஆஜராகியிருந்தனர். அதேபோல, நீதிமன்ற வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

English summary
Sayan and Manoj present in Udhagamandalam District Court due to Kodanadu issue and the case is postponed till Feb.8th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X