நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடர்ந்து பெய்து வரும் கனமழை... மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Google Oneindia Tamil News

உதகை: தொடர் கனமழையால் நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

schools Holidays in Puducherry, Karaikal and Nilgiris tomorrow

இதையடுத்து உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.. ஸ்டாலின்கூடங்குளம் அணுமின்நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.. ஸ்டாலின்

தமிழகத்தில் நீலகிரி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று முழுவதும் விட்டு விட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்

English summary
heavy rain: schools Holidays in Puducherry, Karaikal and Nilgiris tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X