லைனில் வந்த 3 கரடிகள்.. சட்டென கோவிலுக்குள் புகுந்த அந்த நொடி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.. பரபர வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் மூன்று கரடிகள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி கரடி ஊருக்குள் புகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகளில் கரடி, காட்டு மாடு, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!
பல இடங்களில் கட்டுமானம் அதிகரித்துவிட்டதால் விலங்குகள் காட்டில் இருந்து மக்கள் வசிக்கும் இடத்திற்கு வர தொடங்கிவிட்டன. மக்கள் இருக்கும் பகுதிக்கு உணவு தேடி, தண்ணீர் தேடி இது போன்ற விலங்குகள் வருகின்றன. அதிலும் நீலகிரியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் இருக்கும் பகுதிகளில் சமயங்களில் யானைகள் தாக்குவதும் குறிப்பிடத்தக்கது.

கரடி
இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் உள்ள குடியிருப்பு நிறைந்த பகுதிக்குள் கரடிகள் நுழைவந்துள்ளன. இரவு நேரத்தில் மூன்று கரடிகள் குடியிருப்பின் சுற்றுச்சுவரை தாண்டி அங்குள்ள கோவிலின் உள்ளே நுழைந்துள்ளன. இந்த கரடிகள் கோவிலின் உள்ளே நுழைந்த பின் நடந்த சம்பவம்தான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. நைசாக கோவில் உள்ளே வந்த கரடிகள்.. அங்கே இருக்கும் அலங்காரத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் கரடிகள் அப்படியே அங்கு விளக்கில் இருந்த எண்ணெய் குடித்துள்ளது.

என்ன நடந்தது?
இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காலையில் கோவிலில் கரடியின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டது. குடியிருப்பின் உரிமையாளர் சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். இது சம்பந்தமாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது .உடனே இங்கு உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எண்ணெய் குடித்தது
கரடி ஒன்று இப்படி சாதுர்யமாக எண்ணெய் குடித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் ஏற்கனவே ஒரு கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிவாரத்தின் அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியில் கடந்த சில தினங்களாக சுற்றித் திரிந்துள்ளது கரடி ஒன்று.

ஆச்சர்யம்
இது அப்பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிறப்பு காவல்படை குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக கரடி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்த நிலையில், நேற்று இரவு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் தனது குட்டியுடன், தாய் கரடி ஒன்று உலா வந்துள்ளது. இந்நிலையில், உணவு தேடி வந்த கரடி, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.

சிசிடிவி காட்சிகள்
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் பொது மக்கள் கரடியை தற்காலிகமாக காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிமுத்தாறு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால், அப்பகுதியை சுற்றி பலதரப்பட்ட மக்கள் வசிப்பதால் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.