நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெருஞ்சத்தம்.. சூறையாடும் சூறாவளி.. துவம்சம் செய்யும் மழை.. அலேக்காக சரிந்து.. கதி கலங்கும் ஊட்டி

ஊட்டியில் சுழட்டி அடித்து வருகிறது சூறாவளி காற்று

Google Oneindia Tamil News

ஊட்டி: சூறாவளி காற்றின் பெருஞ்சத்தம் ஊட்டியில் கேட்டு கொண்டே இருக்கிறது.. சுழட்டி சுழட்டி காற்று அடிப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீலகிரி கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது.. இதனால், மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களாகவே மழை பொழிவின் அளவு அதிகமாகி வருகிறது.. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

 Sudden Hurricane winds and heavy rain in Ooty

இதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.. கரண்ட் கம்பங்கள் அப்படியே பெயர்ந்து பக்கத்தில் உள்ள மரங்களில் விழுந்து கிடக்கின்றன.. அதனால் நேற்றெல்லாம் ஒட்டுமொத்த ஊட்டியே இருளில் மூழ்கியது.. ஊட்டி மற்றும் புறநகர் முழுவதும் இரவெல்லாம் கரண்ட் இல்லை.

ரோட்டோரங்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்... கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் மரங்கள் விழுந்துள்ளன.. அதனால் அந்த பகுதிகளிலும் கரண்ட் பாதிக்கப்பட்டுள்ளது.. சில இடங்களில் நடுரோட்டிலேயே மரங்கள் விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில் காலையில் இருந்து சூறாவளி காற்று அடித்து வருகிறது.. சுழட்டி சுழட்டி காற்று வீசுவதால், மரங்கள் மேலும் விழுவதற்கு வாய்ப்பு இருக்கும்.. எனவே, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தங்களது வீடுகளை சுற்றி ஆபத்தான மரங்கள் இருந்தால் 1077 எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்க கடலில் குறைந்த இனியும் அதிகனமழை தொடரும் என்று சொல்லி இருக்கிறார்கள்... ஒரு பக்கம் மழை, இன் னொரு பக்கம் சூறாவளியில் ஊட்டி மக்கள் உறைந்து கிடக்கிறார்கள்.

English summary
Sudden Hurricane winds and heavy rain in Ooty
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X