நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாம்பார் சாதம் சாப்பிட்டதால் இறந்ததா புலி.. ஊட்டி அருகே பரபரப்பு.. ஆனால் விஷயம் வேறயாம்!

பிளேடு துண்டினை புலி சாப்பிட்டதால் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊட்டி அருகே இறந்து கிடந்த புலி.. காரணம் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்- வீடியோ

    ஊட்டி: சாம்பார் சாதம் சாப்பிட்டுதான் புலி இறந்துவிட்டதா என்ற நீலகிரி மாவட்ட மக்களின் 2 நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.

    நீலகிரியில் உள்ள முதுமலையில் மொத்தம் 60 புலிகள்தான் இப்போதைக்கு உள்ளன. சில சமயம் உணவு தேடி கிராமப்பகுதிகளுக்கு வந்துவிடும் நிலையும் உள்ளது.

    Tiger died near Ooty

    இந்நிலையில், நேற்று முன்தினம் புலி ஒன்று வனப்பகுதியின் எல்லையில், வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடப்பதை வன ஊழியர்கள் பார்த்தனர். இதை பற்றி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் சொன்னார்கள்

    விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், புலி எப்படி இறந்து போனது என்பது குறித்து விசாரணை ஆரம்பித்தனர். அந்த புலிக்கு கிட்டத்தட்ட 15 வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சாம்பார் சாதம் சாப்பிட்டதால்தான் புலி இறந்துவிட்டதாகவும், கிராமப்புறங்களுக்கு வருவதை தடுக்க யாராவது விஷம் வைத்திருப்பார்களா என்றெல்லாம் விஷயங்கள் பரவின.

    Tiger died near Ooty

    எனினும், போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டால்தான் புலி எப்படி இறந்தது என்றே உறுதி செய்ய முடியும் என்று சொல்லப்பட்டது. அதன்படி நேற்று கால்நடை மருத்துவர்களை அழைத்து உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்திருக்கிறது. பசியில் இருந்த புலி, சாப்பிட எதுவும் கிடைக்காததால், குப்பைகளை சாப்பிட்டதாக தெரிகிறது. அந்த குப்பையில், துண்டு பிளேடு இருந்திருக்கிறது.

    "இதுக்குதான் பணம் தந்தியாண்ணா".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்

    அது என்னவென்றே தெரியாமல் புலி சாப்பிட்டிருக்கிறது. வயிற்றுக்குள் சென்ற பிளேடு நாளுக்கு நாள் வேலை காட்டி வந்துள்ளது.. பிறகுதான் வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறது. ஒரு செ.மீ அளவுள்ள கூர்மையான பிளேடு வயிற்றுக்குள் இருந்தது வெளியே எடுக்கப்பட்டது.

    குப்பையில் கண்டதையும் போடாதீங்கன்னு மக்களிடம் சொன்னால் எங்கே கேட்கிறார்கள். இன்று ஒரு கம்பீரமான புலியின் உயிரை இந்த துண்டு பிளேடு பறித்து விட்டது.

    English summary
    Near Ooty, Tiger died because of a piece of blade and negligence forest depart
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X