நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திறக்கப்படும் ஊட்டி.. செப்டம்பர் 9 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..இதுதான் ரூல்ஸ் பார்த்துக்கங்க!

Google Oneindia Tamil News

ஊட்டி: செப்டம்பர் 9ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

Recommended Video

    செப்டம்பர் 9 முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறப்பு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - வீடியோ

    கொரோனா ஊரடங்கால் நீலகிரி மாவட்டம் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதியில் இருந்தே முற்றிலும் முடங்கி போய் உள்ளது. சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அந்த மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலான சுற்றுலா முழுமையாக முடங்கி உள்ளது.

    தமிழகத்தில் சுமார் ஐந்து மாதத்திற்கு பிறகு பேருந்துகள் முழு அளவில் இயங்க தொடங்கி உள்ளன. எனினும் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைவாசல் தளங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை.

    பாலியல் சில்மிஷத்துக்கு எதிர்ப்பு.. நண்பரால் ஓடும் காரில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண்!பாலியல் சில்மிஷத்துக்கு எதிர்ப்பு.. நண்பரால் ஓடும் காரில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண்!

    இபாஸ் கட்டாயம்

    இபாஸ் கட்டாயம்

    இபாஸ் இருந்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்கிற நிலை உள்ளதால் அங்குள்ள விடுதிகள் தொடர்ந்து முடங்கி உள்ளன. சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

    ஊட்டி கலெக்டர் அறிவிப்பு

    ஊட்டி கலெக்டர் அறிவிப்பு

    இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி முதல் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காக்கள் திறக்கபடும் என்றார். தமிழக அரசின் அறிவிப்பிற்கு பின் மற்ற சுற்றுலா தளங்கள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

    தனி இபாஸ் வழங்கப்படும்

    தனி இபாஸ் வழங்கப்படும்

    நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தனி இ பாஸ் வழங்கபடும் என்றும் அறிவித்துள்ளார்.

    ஆதார் அவசியம்

    ஆதார் அவசியம்

    வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்றும், உள் மாவட்ட சுற்றுல பயணிகள் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

    English summary
    Tourists allowed in the Nilgiris from September 9. District Collector Innocent Divya has announced that parks will be opened in the Nilgiris district from September 9.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X