நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வண்ண வண்ண பூக்களை பார்த்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் .. ஊட்டி கண்காட்சியில் அலைமோதும் கூட்டம்

Google Oneindia Tamil News

ஊட்டி: உதகமண்டலத்தில் நடைபெற்று வரும் 123-வது மலர் கண்காட்சியை 2 நாட்களில் 61,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த மலர் கண்காட்சி துவங்கி நடைபெற்று வருகிறது.

மலர் கண்காட்சி துவங்கி மூன்றாவது நாளான இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது இந்த கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க 1.5 லட்சம் மலர்களால் உருவான நாடாளுமன்ற கட்டிடம், 5 ஆயிரம் தொட்டிகளால் ஆன பிரம்மாண்ட மலர்க்கூடை கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன

Tourists Crowded with Excited go to the ooty flower exhibition

மேலும் துலிப் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ள செல்ஃபி ஸ்பாட் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு வண்ண வண்ண மலர்களை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். இது தவிர தனியார் அரங்குகளில் நடைபெறும் ஓவிய கண்காட்சிகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது

இது தவிர மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மலர்களின் இதழ்களைக் கொண்டு ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் விளையும் காய்கறிகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

பாட்னாவில் தனித்தனி அடையாள அட்டைகளுடன் முதல்முறையாக வாக்களித்த தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள்! பாட்னாவில் தனித்தனி அடையாள அட்டைகளுடன் முதல்முறையாக வாக்களித்த தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள்!

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கத்திரி வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பூங்காக்களுக்குபோகும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கண்காணிக்க பறக்கும் கேமரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பாதுகாப்பு வீரர்கள் அந்த கேமராவை ஆப்பரேட் செய்து தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்

English summary
Over 61,000 visitors in 2 days show the 123rd Flower Show in Ooty. flower exhibition is being held at the Ooty Government Botanic park
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X