நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே டிராபிக்.. சுற்றுலா பயணிகளை ஊருக்குள் விடாதீங்க.. குமுறும் ஊட்டி, கொடைக்கானல்வாசிகள்

Google Oneindia Tamil News

ஊட்டி: தொடர் விடுமுறைகள் காரணமாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கைவிடுக்க தொடங்கியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை, லோக்சபா தேர்தலையொட்டி தமிழகம், தெற்கு கர்நாடகா பகுதியில் விடுமுறையாகும். வெள்ளிக்கிழமை புனித வெள்ளி. இதன்பிறகு, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை தினம். இதுதவிர, ஏற்கனவே இது கோடை காலம் என்பதால் கோடை விடுமுறையும் சேர்ந்து கொண்டது.

Traffic in Ooty and Kodaikanal on the rise

எனவே, தமிழகம் மற்றும் பெங்களூர், மைசூர் உட்பட தெற்கு கர்நாடக பகுதி சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில், ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா தலங்களுக்கு விரைந்தனர்.

ஜாதி, மத கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்... தமிழிசை ஆவேசம் ஜாதி, மத கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்... தமிழிசை ஆவேசம்

இதனால், ஊட்டி, கொடைக்கானலில் கடந்த இரு தினங்களாகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் டிராபிக் ஜாம் ஏற்படுவதால், அவசர விஷயமாக உள்ளூர்வாசிகள், எங்கும் வெளியே செல்ல முடியவதில்லையாம். எனவே சுற்றுலா பயணிகளை நகருக்குள் விடாதீர்கள் என, கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், பிரபல சுற்றுலாத் தலமான சிம்லா நகரை சேர்ந்த மக்கள், சுற்றுலா பயணிகள் தங்கள் நகருக்கு வர வேண்டாம் என கடந்த கோடையில் கோரிக்கைவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Traffic in Ooty and Kodaikanal over rush from yesterday, says local people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X