நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீலகிரியில் வெட்டி கடத்தப்படும் அரியவகை மரங்கள்.. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Google Oneindia Tamil News

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் அரியவகை மரங்களை வெட்டி கடத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வளரக்கூடிய ஈட்டி, தேக்கு, அயனி வகை பலா மற்றும் பலா போன்ற மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது

Trees cut down and kidnapped overnight in Nilgiris.. Forest activists complaint

ஆயினும் நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்துவது தொடர் கதையாகி வருகிறது

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு பந்தலூர் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு இரவோடு இரவாக கேரளாவிற்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இதுகுறித்து காவல்துறை மற்றும்வனத்துறைக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுகக்வில்லை என இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

இந்நிலையில் மரக்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வன ஆர்வலர்கள் தேக்கு சந்தனம் போன்ற விலையுயர்ந்த மரங்கள் மற்றும் குன்னிவாகை, சடச்சி போன்ற அரிய வகை மரங்களை வெட்டி சாய்த்து இயற்கையை சீரழித்து வருகின்றனர்

இதற்கு வனத்துறை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் இந்த குற்றச்செயலுக்கு துணை போகின்றனர் மேலும் வனப்பகுதியில் உள்ள மரங்களை அழிப்பதால் காட்டு மிருகங்கள் அனைத்தும் நகருக்குள் வந்து பொதுமக்களை தாக்கும் அபாய சூழலும் நிலவுகிறது

எனவே மரக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து கண்டுபிடித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் மரக்கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

English summary
Nature activists have urged the government to take action against those who smuggle rare trees in the Nilgiris district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X