நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ராத்திரியெல்லாம் உறுமல்.. பயமா இருக்கு" சுருக்கு கம்பியில் சிக்கி தப்பிய புலி.. கிலியில் கோத்தகிரி

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம் உள்ளது

Google Oneindia Tamil News

நீலகிரி: சுருக்கு கம்பியில் சிக்கிய புலியை காணோம்.. எங்கே தப்பி ஓடிவிட்டது என்று தெரியவில்லை.. அதைதான் வனத்துறையினர் தேடி வருகிறார்கள்!

நீலகிரி வனக்கோட்டம், கோத்தகிரி அருகே உயிலட்டியில், ஏராளமான காய்கறி தோட்டங்கள், விவசாய நிலங்கள் உள்ளன.. இங்கு விளைந்திருக்கும் காய்கறிகளை பக்கத்து காட்டில் உள்ள விலங்குகள் அடிக்கடி வந்து சேதப்படுத்தி விடுவதாகவும் அடிக்கடி சொல்லப்படுகிறது.

இதனால், விளைநிலங்கள் பாழாகிவிடக்கூடாது என்பதற்காக அந்த வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்காகவே அப்பகுதி மக்கள், ஆங்காங்கே சுருக்கு கம்பிகளை வைத்துள்ளனர்.. இந்நிலையில், அந்த பகுதிக்கு வழக்கமாக வரும் புலி ஒன்று நேற்று வந்துள்ளது.

சுருக்கு கம்பி

சுருக்கு கம்பி

வேலி சுருக்கு கம்பி இருப்பது தெரியாமல், அதில் சிக்கி கொண்டது.. புலியின் கால் மொத்தமாக சிக்கி கொண்டதால், அதனால் அங்கிருந்து ஓட முடியவில்லை.. உறுமல் சத்தம் கேட்டு கொண்டே இருக்கவும்தான் பொதுமக்களுக்கு தெரியவந்தது.. அதனால் புலியை மீட்க வேண்டும் என்று உடனடியாக வன அலுவலர்களுக்கு தகவல் சொன்னார்கள்.. அவர்களும் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி, மீட்க முடிவெடுத்தனர்.

தப்பி ஓடியது

தப்பி ஓடியது

கோவை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் இறங்கினர்.. அந்த நேரம் பார்த்து அந்த புலி திடீரென சுருக்கு கம்பியை அறுத்து கொண்டு, பக்கத்தில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் புகுந்துவிட்டது.. இதை கொஞ்சமும் எதிர்பாராத வனத்துறையினர், அருகிலிருந்த மரங்களில் ஏறி, கற்கள் எறிந்து, புலியை துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனாலும் புலி தோட்டத்தில் இருந்து வெளியேவே இல்லை... அங்கேயே படுத்து கொண்டது.

பயமா இருக்கு

பயமா இருக்கு

நேற்றிரவு 7 மணி ஆகிவிட்டதால், அதற்கு மேல் இருட்டில் புலியை தேட முடியவில்லை... இதனால், அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துவின்ர்.. இதை பற்றி அவர்கள் சொல்லும்போது, "மயக்க ஊசி செலுத்துவதற்கான துப்பாக்கி, மருந்து, எல்லாமே தாமதமாக வரவழைக்கப்பட்டது.. அதனால்தான் புலியை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.. புலி எங்கே இருக்குன்னே தெரியல.. பயமா இருக்கு.." என்றனர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஆனால் வனத்துறையினரோ, இங்கேயேதான முகாமிட்டுள்ளோம்.. பொதுமக்கள் யாரும் புலியின் அருகே போகாதவாறு பாதுகாப்பு நடவடிக்கையையும் எடுத்துள்ளோம்.. பகலில் எப்படியாவது புலியை மயக்க ஊசி போட்டு பிடித்து, காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
villagers fear about tiger near kottagiri and forest officials taking serious steps on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X