நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீலகிரியில் நாளை கன மழை... கடந்த ஆண்டைப் போலவே.. பெருமழை பெய்யுமா.. கவலையில் மக்கள்!

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரியில் நாளையும் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பெருமழை பெய்ததால் மக்கள் அதே போல நாளையும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெரு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல இடங்களில் சரிவுகள் ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எமரால்டு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மக்களை பயமுறுத்தியுள்ளது. நீலகிரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழையில் கேத்தை என்ற நகரமே இப்படி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அதுபோன்ற நிகழ்வு தற்போது நடந்து வருகிறது என்று சமூக வலைதலங்ககளில் நீலகிரி வாசிகள் பதிவு செய்து வருகின்றனர்.

Weather Forecast: heavy rains predicted to nilgiris tomorrow

ஒவ்வொரு ஆண்டும் அவலாஞ்சி பகுதியில் அதிக மழை பெய்யும். இந்த ஆண்டும் இங்கு அதிக மழை பெய்துள்ளது. இத்துடன் அப்பர்பவானியிலும் அதிக மழை பெய்தது. பவானி அணை நிறைந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை நேற்று பதிவாகி இருந்தது. இதனால், அதையொட்டி உள்ள அபாயகரமான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, ஊட்டி, பைக்காரா, கூடலுார், பந்தலுார் உட்பட பல பகுதிகளிலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொடந்து நீலகிரியில் தீயணைப்பு படை வீரர்களும், மீட்புப் படையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரியில் நாளையும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவலாஞ்சியில் கடந்தாண்டு 820 எம்எம் மழை ஆகஸ்ட் 8ஆம் தேதியும், ஆகஸ்ட் 9ஆம் தேதி 911 எம்எம் மழையும் பெய்து இருந்தது. அதேபோல் நாளையும் கன மழை பெய்யும் என்று அறிவித்து இருப்பது நீலகிரி மக்களை கவலை அடையச் செய்துள்ளது.

நீலகிரியில் இருக்கும் முக்குர்த்தி அணைக்கு கடந்த நான்கு நாட்களில் 326 எம்எம் தண்ணீர் வந்துள்ளது. இங்கு 1500 எம்எம் மழை பெய்துள்ளது. வால்பாறையில் இருக்கும் சோலையாறு அணை, காடம்பாறை அணை, அப்பர் ஆழியாறு, துண்ணக்கடவு அணை ஆகியவையும் நிறைந்துள்ளன.

அப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள் அப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள்

English summary
Weather Forecast: heavy rains predicted to nilgiris tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X