நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரி நேரத்தில்.. எஸ்பி வேலுமணி காரையே வழிமறித்த அந்த ஒற்றை காட்டு யானை.. ஊட்டி ரோட்டில் பரபரப்பு

Google Oneindia Tamil News

ஊட்டி: ராத்திரி நேரத்தில் அமைச்சர் வேலுமணியை ஒரு காட்டு யானை வழிமறித்து கொண்டு நின்றது.. இதனால் காருக்குள்ளேயே அமைச்சர் உட்கார்ந்திருந்தார்.. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை தந்துவிட்டது.

நீலகிரியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு பலத்த மழை பெய்து வருகிறது.. இதனால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. கடந்த வாரம் முழுவதுமே கனத்த மழை பெய்ததால், பெரும் அவதிக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.

நிலப்பகுதிகள் அப்படி அப்படியே சரிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்து கொண்டும் போனது.. பல பகுதிகளில் காற்று சுழன்று சுழன்று அடித்து வருகிறது.. இனியும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டு முன்னேற்பாடுகளையும், மீட்பு நடவடிக்கைகளையும் செய்து வருகிறது.

அப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள் அப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள்

 வெள்ள பாதிப்பு

வெள்ள பாதிப்பு

இந்நிலையில், இந்த வெள்ள பாதிப்பு பகுதிகளை அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். குறிப்பாக கூடலூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் அதிகம் என்பதால், அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்றிருந்தனர்.

ஆய்வு

ஆய்வு

ஆய்வுகளை முடித்துவிட்டு, பிறகு ஊட்டி வந்தனர்.. அங்கு தமிழக விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு ஊட்டியிலிருந்து நைட் கோயம்புத்தூருக்கு அமைச்சர்கள் காரில் திரும்பினர்.. அவர்களுடன் பாதுகாப்பு அதிகாரிகள் கார்களில் வந்திருந்தனர்.

நடுரோடு

நடுரோடு

வழக்கமாக நைட் நேரத்தில் ஊட்டி மெயின் ரோட்டில் நிறைய யானைகள் நடமாடும்.. பக்கத்திலேயே வனப்பகுதி இருப்பதால், அந்த பக்கத்தில் இருந்து இந்த பக்கத்திற்கு சாலைகளை கிராஸ் செய்து கொண்டு போகும்.. நைட் நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால், சில சமயம் நடுரோட்டிலேயே படுத்து கொள்ளும்.. பாதையை மறித்து கொள்ளும்.

 ஹார்ன் சத்தம்

ஹார்ன் சத்தம்

அதனால் யாராவது அந்த பக்கம் வாகனங்களில் வரும்போது, யானையை நடுரோட்டில் பார்த்துவிட்டால், வண்டிகளில் உள்ள லைட்டுகளை ஆப் செய்துவிடுவார்கள்.. இல்லையென்றால் ஹார்ன் சத்தம் கேட்டு அந்த யானைகள் அங்கிருந்து போய்விடும். அந்த மாதிரிதான் அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன் வரும்போது, மலைப்பகுதியில், அதாவது பர்லியார் அருகே ஒற்றையானை நடுரோட்டில் வழிமறித்து நின்று கொண்டது.

 யானை

யானை

இதனால் அமைச்சர்களால் காரை எடுத்து கொண்டு கிளம்பி செல்ல முடியவில்லை.. கொஞ்ச நேரம் ரோட்டிலேயே அவர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது... காருக்குள்ளேயே அமைச்சர்கள் உட்கார்ந்திருந்தனர்.. பிறகு யானையே அங்கிருந்து நகர்ந்த பிறகுதான் அவர்கள் கார் புறப்பட்டு சென்றது... அதன்பிறகே அமைச்சர்கள் கோவை வந்து சேர்ந்தனர்.

English summary
wild elephant intercepted minister velumani car in ooty main road
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X