நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊட்டி உமா கொலை இல்லை.. தற்கொலை.. வாட்டிய தனிமை.. வாழ விரும்பவில்லை.. பரபர கடிதம்

தனிமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக பெண் கடிதம் எழுதி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அறுபட்டு கிடந்த உமா, துடித்த அபிஷேக்.. அதிர்ச்சியில் உறைந்த ஊட்டி-வீடியோ

    ஊட்டி: தனிமை அதிகமாக வாட்டியதால்தான், கழுத்து அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக உயிரிழந்த உமா, எழுதிய கடிதத்தை ஊட்டி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    ஊட்டியில் நொண்டிமேடு என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வந்தவர் உமா. இவருக்கு வயசு 43. இவரது கணவர் பெயர் பசுவராஜ். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்து வந்துவிட்டார். உமாசங்கர், அபிஷேக் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். அதனால் மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

    Woman committed suicide dueto depression in Ooty

    உமாசங்கர் கோவையில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் அபிஷேக் தனியார் காட்டேஜ் ஒன்றில் பார்ட் டைம் வேலை இரவு நேரங்களில் பார்க்கிறார். வழக்கம்போல, 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு, மறுநாள் காலை வீட்டுக்கு வந்தார்.

    அப்போது உமாவின் கழுத்து அறுபட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாகி கிடப்பதை கண்டு அலறினார். உடனடியாக ஊட்டி பி1 போலீஸாருக்கு தகவல் சொல்ல, மோப்ப நாயுடன் விசாரணை ஆரம்பமானது. வீட்டிற்குள் எந்த பொருளுமே திருடு போகவில்லை என்பதால், இந்த கொலையை கொள்ளையர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. கிச்சனிலும், பெட்ரூமிலும் உமாவின் ரத்தக்கறை இருந்தது பல சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து உமா எழுதிய கடிதம் ஒன்றினை போலீசார் கைப்பற்றினர். அதில்,'நான் தனிமையில் வாழ விரும்பவில்லை; என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. மகன்கள் இருவரையும் உறவினர்கள் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். கொலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக, தன்னை தானே கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டார்,' என்பது, தெரியவந்துள்ளது.

    English summary
    43 years old Woman committed suicide due to depression and loanlyness in Ooty
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X