நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்பக்கம் தாளிடப்பட்ட கதவு.. உயிருக்கு போராடிய மகன்.. பிணமாகி கிடந்த தாய்.. கோத்தகிரியில் பரபரப்பு

கோத்தகிரியில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உயிருக்கு போராடிய மகன்.. பிணமாகி கிடந்த தாய்.. கோத்தகிரியில் பரபரப்பு- வீடியோ

    கோத்தகிரி: தாளிடப்பட்டு இருந்த கதவின் இடுக்கின் வழியாக வழிந்தோடிக் கொண்டிருந்த ரத்தத்தை பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது வசந்தாவுக்கு!! கோத்தகிரியில்தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது.

    கோத்தகிரி அருகே ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர்தான் ராஜேஷ்குமார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி. இவருக்கு வயது 25. இந்த தம்பதிக்கு 4 வயதில் கார்த்திகேயன் என்ற ஒரு மகன் உள்ளான்.

    [உன் மகளும் வருவாரா?... நிர்மலாதேவியையே அதிர வைத்த முருகனின் கேள்வி!]

    மகளை பார்க்க வந்த தாய்

    மகளை பார்க்க வந்த தாய்

    கணவன் வெளிநாட்டில் இருப்பதால், லோகேஸ்வரி, மகனுடன் தனியாக வசித்து வருகிறார். வேறு ஒரு பகுதியில் குடியிருக்கும் லோகேஸ்வரி அம்மா வசந்தா அவ்வப்போது மகளை வந்து பார்த்துவிட்டு போனார். அப்படித்தான் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மகளை பார்க்க வந்தார். கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.

    கழுத்து அறுப்பு

    கழுத்து அறுப்பு

    ரொம்ப நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவே இல்லை. அப்போது கதவிடுக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்த வசந்தா உடனடியாக கோத்தகிரி போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றார்கள். அங்கே லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டநிலையில் பிணமாக கிடந்தார். அறை முழுவதும் ரத்த வெள்ளம் நிறைந்திருந்தது.

    மோப்பமாய்

    மோப்பமாய்

    பிறகு 4 வயது மகனின் கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. அவன் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். இதையடுத்து அவனை மீட்ட போலீசார் உடனடியாக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்து உடனடியாக குன்னூர் எஸ்.பி. உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கூடவே மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் என விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

    சிசிடிவி விசாரணை

    சிசிடிவி விசாரணை

    கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? கொள்ளை அடிக்க வந்தவர்களா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோத தகராறா? என எதுவுமே இதுவரை போலீசாருக்கு பிடிபடவே இல்லை. ஆனால் கொலையாளிகள் தாயும், மகனையும் கொல்ல கத்தரிக்கோல், கத்தியை பயன்படுத்தி இருக்கிறார்கள். இவற்றினை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி மற்றும் லோகேஸ்வரின் செல்போனில் பேசியவர்கள் யார் யார் என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    கத்திரிகோல்

    கத்திரிகோல்

    கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது தீவிர சிகிச்சையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு உள்ளான். மருத்துவர்கள் அவன் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள். அவன் குணம் அடைந்தவுடன் அவனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். இப்படி இளம்பெண்ணை கத்திரிகோலால் குத்தி படுகொலை செய்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.

    English summary
    Young women murder in Kotagiri and Police investigation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X