For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்போதைய ஆளுநர் இருக்கும் வரை வழக்கு விசாரணை நடக்காது.. நிர்மலா தேவி வக்கீல்

Google Oneindia Tamil News

Recommended Video

    தற்போதைய ஆளுநர் இருக்கும் வரை வழக்கு விசாரணை நடக்காது.. நிர்மலா தேவி வக்கீல்

    விருதுநகர்: தற்போதைய ஆளுநர் தமிழகத்தில் இருக்கும் வரை இந்த வழக்கு விசாரணை நடக்காது என நிர்மலா தேவியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர். உதவி பேராசிரியர் முருகன் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேரும் வரும் 27 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

    nirmala devi appears in srivilliputhur court

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேராசிரியா நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ஜாமீனில் வெளியே இருக்கும் நிர்மலா தேவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் மிரட்டல்கள் இருக்கிறது. தற்போதைய கவர்னர் தமிழகத்தில் இருக்கும் வரை இந்த வழக்கு விசாரணை முடியாது.

    சிறையில் அனுபவித்த தனிமை மற்றும் கொடுமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிர்மலா தேவி தற்போது உரிய சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருக்கிறார்.

    ஏற்கனவே தாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில் வரும் 27ஆம் தேதி சார்ஜ் பிரேம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே, வழக்கமாக காரில் வரும் நிர்மலாதேவி இன்று இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்து சென்றார்.

    English summary
    Nirmala Devi appeared in Srivilliputhur court today in her case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X