• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மர்மமான நோயால் உயிருக்கு போராடும் சிறுவன்.. நீங்கள் மனது வைத்தால் பிழைப்பான்!

சென்னை: மர்மமான நோயால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சிறுவனின் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவுங்கள்!

கடந்த ஏப்ரல் 1, 2017, நாங்கள் எங்கள் மகன் அமானை இழந்தோம். அவனின் மறைவிற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அவனுக்கு செடியாக் - ஹிகாஷி சிண்ட்ரோம் chediak-higashi syndrome என்ற நோய் தாக்குதல் ஏற்பட்டது. இது எதிர்ப்பு சக்தி குறைபாட்டு நோய் ஆகும். இதனால் உடலில் புள்ளி புள்ளியாக வரும், கண்களின் நிறம் மாறும். இதனால் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து நோய் தாக்குதல் அதிகரிக்கும்.

Parents who have already lost a child to rare disease are struggling to save other

அந்த நோயை புரிந்து கொண்டு அதற்கு சிகிச்சை அளிக்கும் முன் எங்கள் மகன் மரணம் அடைந்துவிட்டான். எங்கள் குழந்தை, எங்கள் கண் முன் மரணம் அடைந்ததை எப்படி வார்த்தையால் விவரிப்பது என்று தெரியவில்லை. அவனின் மரணம் எங்கள் இதயத்தில் பெரிய தழும்பாக மாறிவிட்டது. அது மறையவே மறையாது. நாங்கள் மொத்த நம்பிக்கையையும் இழந்துவிட்டோம், இப்போது நாங்கள் வாழ்வது எல்லாம் எங்கள் இளைய மகன் அனாஸுக்காக மட்டும்தான்.

Parents who have already lost a child to rare disease are struggling to save other

ஆனால் 2017 ஜூலை மாதம் அமான் இறந்து இரண்டு மாதம் கழித்து எங்கள் இளைய மகன் அனாஸுக்கு அதேபோல் நோய் அறிகுறிகள் தென்பட்டது. அவனின் தோல் கருப்பாக மாறியது, அவனின் கண்கள் வேகமாக இங்கும் அங்கும் ஆடியது. எங்களுக்கு பெரிய அச்சம். நாங்கள் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

அன்று நாங்கள் அச்சப்பட்டது போலவே நடந்துவிட்டது. அனாஸை சோதனை செய்த மருத்துவர்கள், அவனுக்கும் அதே செடியாக் - ஹிகாஷி சிண்ட்ரோம் chediak-higashi syndrome நோய் இருப்பதாக கூறினார்கள். எங்களுக்கு எல்லாம் நிலைகுலைந்தது போல இருந்தது. கடவுள் எங்களுக்காக என்ன வைத்து இருக்கிறார், ஏன் இப்படி சோதிக்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை.

Parents who have already lost a child to rare disease are struggling to save other

இந்த நோய்க்கு மருந்து கொடுப்பது எல்லாம் தற்காலிகமானது. அது நிரந்தர தீர்வை தராது. ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமேதான் அனாஸை குணப்படுத்த முடியும். அதற்கு 2250000 ரூபாய் செலவாகும். ஆனால் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதால், நாங்கள் வெறும் மாத்திரை மட்டுமே வழங்கி வருகிறோம்.

Parents who have already lost a child to rare disease are struggling to save other

அந்த நோய் தாக்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் என் மகனின் சிகிச்சைக்காக பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. கடந்த இரண்டு வருடத்தில் நாங்கள் எல்லா விதமான முயற்சியையும் எடுத்துவிட்டோம். ஆனால் பணத்தை மட்டும் ஏற்பாடு செய்ய முடியவில்லை, என்று அனாஸின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Parents who have already lost a child to rare disease are struggling to save other

அனாஸின் அப்பா ஹபீப் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். அவருக்கு பெரிய அளவில் சம்பளம் கிடையாது. இதுவரை பார்த்த சிகிச்சைக்கே நிறைய செலவாகிவிட்டது. அதே சமயம் இன்னொரு பக்கம் அனாஸின் உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. உடல் கருத்து, கண்கள் சுழன்று தற்போது உடலில் ரத்தமும் வர தொடங்கிவிட்டது.

Parents who have already lost a child to rare disease are struggling to save other

அனாசை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.நீங்கள் அனாசை காப்பாற்ற விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும். இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

 
 
 
English summary
Parents who have already lost a child to rare disease are struggling to save other child.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X