பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரான்சில் 36 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அக்கரை சீமை 03-02-2020 | World news update 03-02-2020

    பாரிஸ்: சீனாவின் வுகானில் இருந்து அழைத்து வரப்பட்ட 254 பேரில் 36 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின் தெரிவித்துள்ளார்.

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 17 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

    36 evacuated from China to France show coronavirus symptoms

    இதன் காரணமாக சீனாவில் வசித்த ஐரோப்பாவைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் நாடுகளுக்கு திரும்ப அழைத்து வரப்படுகிறார்கள். சீனாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸ்க்கு 254 ஐரோப்பியர்கள் தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

    வரலாறு காணாத பொருளாதார சரிவு.. மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.. சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா! வரலாறு காணாத பொருளாதார சரிவு.. மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.. சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா!

    அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 36 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் பிரான்ஸை சேர்ந்த 20 பேரை பிரான்ஸின் இஸ்டரஸ் விமான நிலையத்தில் வைத்து சோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மற்ற 16 பேரை அவரவர் நாட்டுக்கு பிரான்ஸ் அரசு அனுப்பி வைத்துவிட்டது.

    இதேபோல் வைரஸால் பாதிக்கப்படாத பிரான்ஸை சேராத 124 பேர் இஸ்டரஸ் விமான நிலையத்தில் இருந்து அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பபட்டனர்.

    English summary
    36 evacuated from China to France show virus symptoms : Health Minister Agnes Buzyn
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X