பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரிஸில் கூடிய உலகின் முக்கிய 70 தலைவர்கள்.. ஒரே இடத்தில் டிரம்ப், புடின், பலர்.. ஏன் தெரியுமா?

உலக நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் முதல் உலகப்போர் நூற்றாண்டு நினைவு நாள் இன்று பிரான்சில் அனுசரிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

பாரிஸ்: உலக நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் முதல் உலகப்போர் நூற்றாண்டு நினைவு நாள் இன்று பிரான்சில் அனுசரிக்கப்பட்டது.

உலகப் போர் 1918ல் முடிவடைந்தது. இந்த போர் முடிவடைந்ததாக நவம்பர் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதே நாள் காலை 11 மணிக்கு இந்த போர் அதிகாரப்பூர்வமாக முடிந்ததாக பிரான்சில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றோடு இந்த போர் முடிந்து 100 வருடங்கள் ஆகிவிட்டது. இதை நினைவுட்டும் விதமாக உலகம் முழுக்க கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.

என்ன போர்

இந்த போரில் நேச நாடுகளும், மைய நாடுகளும் மோதிக்கொண்டது. நேச நாடுகளின் அணியில் பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இருந்தது. மைய நாடுகளின் அணியில் ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இருந்தது. இந்தியாவை சேர்ந்த 13 லட்சம் போர் வீரர்கள் ஐரோப்பா படையில் இருந்தனர். இதில் மொத்தம் 2 கோடி பலியானார்கள். 4 கோடி பேர் காயம் அடைந்தனர்.

நினைவு நாள்

பாரிஸில் உள்ள ஆர்க் டி டிரையோம்ப்பில் இந்த விழா நடக்கிறது. அங்குதான் இந்த போரில் இறந்த பல ஆயிரம் போர் வீரர்களின் சமாதி உள்ளது. அதற்கு அருகே போர் நிறுத்த நினைவு சின்னமும் உள்ளது. இந்த இடத்தில்தான் உலக நாடுகளை சேர்ந்த 70 முக்கிய தலைவர்கள் பிரான்ஸ் நேரப்படி காலை 11 மணிக்கு கூடினார்கள்.

யார் எல்லாம்

பிரான்சில் நடக்கும் விழாவில் உலகின் முக்கிய 70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஜெர்மனி உள்ளிட்ட நாட்டின் தலைவர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

சர்ச்சை 1

ஆனாலும் இந்த நிகழ்விற்கு சென்றும் கூட அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். நேற்று பிரான்சில் இந்த போரில் இறந்த அமெரிக்க வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மழையை காரணம் காட்டி அந்த நிகழ்விற்கு செல்லவில்லை. இதை அமெரிக்கர்கள் வன்மையாக கண்டித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சர்ச்சை 2

சர்ச்சை 2

அதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இரண்டு பெண்கள் மேலாடையால் இல்லாமல் அவருக்கு முன் ஓடி வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இவர்கள் இருவரும் பேமென் FEMEN என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். அந்த அமைப்பு பிரான்சின் பெரிய பெண்ணுரிமை அமைப்பு ஆகும். இவர்கள் இருவரின் உடலிலும் ' போர் குற்றவாளிகளே வருக (welcome war criminals)'' என்று எழுதப்பட்டு இருந்தது.

ஏற்கனவே நடந்தது

இதேபோல் மற்ற சில நாடுகளிலும் போர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தேசிய போர் நினைந்தவிடத்தில் விழா நடந்தது. நியூசிலாந்தில் தலைநகர் வெல்லிங்டனில் விழா நடந்தது. லண்டனிலும் தனியாக விழா நடந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
70 World leaders hold a magnificent ceremony in Paris to mark WW1 Armistice centenary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X