பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரீஸ் பயங்கரம்.. காவல்துறை தலைமையகத்திற்குள் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்.. 4 அதிகாரிகள் பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    பாரிஸில் காவல்துறை தலைமையகத்திற்குள் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்

    பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள, காவல்துறை தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து ஒரு நபர் கத்தியால் சரமாரியாக தாக்கியதில் 4 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர்.

    பாரிஸ் நகரம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகுவது, சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    A knife-wielding attacker kills four police officers in Paris

    தாக்குதலை நடத்திய அந்த நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றது என்பது இன்னும் புலப்படவில்லை.

    அதே அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் வேலை பார்த்த ஒருவர் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த சில பொதுமக்கள் மீடியாக்களிடம் கூறுகையில் "கத்திக் குத்து சம்பவத்தை பார்த்ததும் மக்கள் அங்குமிங்கும் அலறி ஓடினர். அழுகை சத்தம் கேட்டது. இதன்பிறகு துப்பாக்கியால் சுடப்படும் சத்தமும் கேட்டது" என்று தெரிவித்துள்ளனர்.

    வளைத்து வளைத்து பிடிக்கும் தமிழக போலீஸ்.. ஒரே வருடத்தில் ஹெல்மெட் விதிமீறல் வழக்கு 91% அதிகரிப்புவளைத்து வளைத்து பிடிக்கும் தமிழக போலீஸ்.. ஒரே வருடத்தில் ஹெல்மெட் விதிமீறல் வழக்கு 91% அதிகரிப்பு

    2015 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது தீவிரவாதிகளின் தாக்குதல்கள் பிரான்ஸை உலுக்கி வருகிறது. இதில் தனிநபர்களின் கத்தி மற்றும் துப்பாக்கி தாக்குதல்கள் ஆகியவையும் அடங்கும். ஆக மொத்தம் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    2015 ஜனவரி மாதத்தில், துப்பாக்கியுடன் நுழைந்த இருவர் பாரிஸிலுள்ள சார்லி ஹெப்டோ இதழ் அலுவலகத்திற்குள் சரமாரியாக சுட்டதில் அதன் ஊழியர்கள், 12 பேர் கொல்லப்பட்டனர்.

    மறுநாள் பாரிஸுக்கு வெளியே ஒரு பெண் போலீஸ் கொல்லப்பட்டார். அந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி, பிரான்ஸ் அதன் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டது.

    ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிரான்ஸ்-ஜெர்மனி நடுவேயான கால்பந்து போட்டி நடைபெற்ற மைதானம், பாரிஸ் கஃபேக்கள், மற்றும் படாக்லான் கச்சேரி அரங்கில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர், 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    English summary
    Four police officers have died in a knife attack carried out by an administrator at the Paris police headquarters. The attacker was shot to death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X