பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் போராட்டம்.. பிரான்சில் கூடிய 4 லட்சம் பேர்.. பயந்து பெட்ரோல் விலையை குறைத்த அதிபர்!

Google Oneindia Tamil News

பாரிஸ்: பிரான்சில் நடந்த மக்கள் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் மக்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள். இது மஞ்சள் சட்டை புரட்சி என்று அழைக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 14ம் தேதி இந்த போராட்டம் சிறிய பேரணியாக தொடங்கியது. ஆனால் மக்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றதும் பெரிதானது.

உலகில் வேகமாக வளரும் சிட்டிகளில் திருப்பூர் சாதனை.. நியூயார்க், பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளியது! உலகில் வேகமாக வளரும் சிட்டிகளில் திருப்பூர் சாதனை.. நியூயார்க், பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளியது!

மிகப்பெரிய போராட்டம்

மிகப்பெரிய போராட்டம்

பெரும்பாலும் இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் பிரான்சில் பெட்ரோல் விலை 140 ரூபாய் வரை விற்கிறது. டீசல் 120 ரூபாய் வரை விற்கிறது. இதை எதிர்த்து 4 லட்சம் பேர் வரை பாரிஸின் ஆர் டி டிரோம்ப் அருகே இருக்கும் கட்டிடத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

பெரிய கலவரம்

பெரிய கலவரம்

இதில் தினமும் கலவரமும் நடந்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயம் அடைந்தனர். 721 பேர் படுகாயம் அடைந்தனர். 25 போலீசார் தாக்கப்பட்டனர். 700 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் வேகமாக நகர்ந்த போராட்டம் நேற்று பாரிஸ் அருகே வந்தது. இதனால் அந்நாட்டு அரசு அதிர்ச்சிக்கு உள்ளானது.

பெரிய பல்டி

பெரிய பல்டி

முதலில் இந்த போராட்டத்தை பெரிய அளவில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் கண்டுகொள்ளவில்லை. போராட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாது. இதை எல்லாம் நான் மதிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் ஒரே நாளில் 4 லட்சம் பேர் வரை போராட்டத்தில் குதித்த காரணத்தால் அவர் தனது முடிவை மாற்றி இருக்கிறார்.

பின்வாங்கினார்

பின்வாங்கினார்

அதன்படி முதல்6 மாதங்களுக்கு எரிபொருள் வரியை குறைப்பதாக கூறினார். தற்போது 6 மாதங்களுக்கு பின் மீண்டும் வரி பட்ஜெட்டின் போது குறைக்கப்படும். அதன்பின் எந்த விதமான கூடுதல் வரியும் எரிபொருளில் விதிக்கப்படாது என்று மொத்தமாக பின் வாங்கி உள்ளார்.

பெரிய வெற்றி

பெரிய வெற்றி

சில கலவரங்களுடன் நடந்த இந்த போராட்டம் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. 4 லட்சம் பேர் தெருவில் வந்ததன் பலனை அனுபவித்து இருக்கிறார்கள். உலகில் பல முக்கிய போராட்டங்களில் இந்த போராட்டமும் ஒன்றாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Big win France fuel protests as France President Macron decides to scrap fuel tax hike completely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X