பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து #NotreDame

Google Oneindia Tamil News

Recommended Video

    பாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து

    பாரீஸ்: பாரீஸ் நகரில் உள்ள மிகப் பழமையான புகழ் பெற்ற நாட்ரிடாம் கதீட்ரலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சர்ச்சின் பல பகுதிகள் சேதமடைந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    colossal fire swept through the famed Notre-Dame Cathedral in central Paris

    இருப்பினும் இந்த பயங்கர தீவிபத்தில் நாட்ரி டாம் சர்ச்சின் முக்கியப் பகுதி சேதமடையவில்லை என்று பாரீஸ் தீயணைப்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது. தீவிபத்தால் பாரீஸ் நகரின் மேல் பகுதியில் வெந்நிற மற்றும் கரும்புகை சூழ்ந்தது. கோதிக் கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்ட மிகப் பழமையான சர்ச் இது.

    தீவிபத்தில் சதி வேலை ஏதும் இல்லை என நம்புவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. படு வேகமாக தீ சர்ச்சுக்குள் பரவியது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப் பிரபலமான கதீட்ரல் இது. மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் கூடியதும் கூட.

    colossal fire swept through the famed Notre-Dame Cathedral in central Paris

    இந்த தீவிபத்து குறித்து தகவல் பரவியதும் பாரீஸ் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளை விட்டு ஓடி வந்து தீப்பிடித்து எரிவதை வேதனை மற்றும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்த சர்ச்சுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பேர் வருகை தருவார்கள். கோதிக் கலை கட்டட வடிவமைப்புக்கு பெயர் போனது இந்த நாட்ரிடாம் கதீட்ரல். இதன் மேற்கூரையானது மரத்தால் ஆனது. அது முழுவதும் தீயில் சேதமடைந்து விட்டதாம்.

    colossal fire swept through the famed Notre-Dame Cathedral in central Paris

    தற்போது சர்ச்சில் மராமத்து பணிகள் நடந்து வந்தன. அதில்தான் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். தனது அரசின் கொள்கை முடிவுகள் குறித்து டிவியில் உரையாற்றத் திட்டமிட்டிருந்த மேக்ரான் தீவிபத்தைத் தொடர்ந்து அதை ரத்து செய்து விட்டார்.

    பாரீஸ் மேயர் ஆனி ஹிடால்கோ வெளியிட்டுள்ள டிவீட்டில் இது மிகவும் மோசமான தீவிபத்து. பாரீஸ் தீயணைப்புப் படையினர் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பு கருதி கதீட்ரல் அருகே வராமல் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    A colossal fire swept through the famed Notre-Dame Cathedral in central Paris on Monday, causing a spire to collapse and raising fears over the future of the nearly millenium old building and its precious artworks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X