மருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு
பாரிஸ்: உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் மிக அழகிய நாடான பிரான்ஸை மரண பீதியில் ஆழ்த்தி உள்ளது. அங்கு உலகிலேயே மிகஅதிபட்சமாக ஒரே நாளில் 1355 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய் ஐரோப்பிய நாடுகளை மோசமாக பாதித்துள்ளது. அங்குள்ள 27 நாடுகளும், அதனை சுற்றியுள்ள பிற நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலக காதலர்கள் சங்கமிக்கும் இடமாகவும், உலகின் மிக அழகான நாடாகவும் அறியப்பட்ட பிரான்சை இப்போது கொரோனா வைரஸ் சிதைத்து வருகிறது.
வேகமாக உயரும் கிராப்.. இந்தியாவில் ஒரே நாளில் 484 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 2543 ஆக உயர்வு

உலகிலேயே அதிகம்
நேற்று பிரான்சின் பல்வேறு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து 100க்கணக்கானோர் உயிரிழந்தனர். யாரும் எதிர்பாராதவிதமாக ஒரேநாளில் பிரான்சில்(இன்று காலையுடன்) 1355 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரான்ஸ் அரசு வெளியிட்ட கணக்கு(நேற்றுடன்) என்றால் 884 பேர் இறந்ததாக தெரிவித்துள்ளது.

பாதிப்பு 59105
ஒரேநாளில் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் பிரான்சில் ஒட்டுமொத்தமாக இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5387 பேர் இறந்துள்ளனர். பிரான்சிசில் நேற்று புதிததாக 2166 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59105 ஆக உயர்ந்துள்ளது.

41290 பேர் சிகிச்சை
பிரான்சில் இதுவரை கொரோனாவால் 12428 பேர் பூர்ண குணமடைந்துள்ளனர். தற்போது 41290 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 6399 பேர் அதாவது 15 சதவீதம் பேர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 34891 பேர் அதாவது 85 சதவீதம் பேர் ஓரளவு பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிர்ச்சி தகவல்
பிரான்சில் பிப்ரவரி 15 ம்தேதி 12 ஆக இருந்த கொரோனா பாதிப்பு மார்ச் 11ம் தேதி 2 ஆயிரத்தை கடந்தது. மார்ச் 19ம் தேதி 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு. அதன்பிறகு ஆயிரங்களிலும் அதிகரிக்க ஆரம்பித்தது. மார்ச் 24 தேதிக்குள் 20 ஆயிரத்தை கடந்தது. மார்ச் 29ம் தேதி 40 ஆயிரமாகவும் மார்ச் 31 ம் தேதி 50 ஆயிரமாகவும் ஏப்ரல் 1ம் தேதி 56 ஆயிரமாகவும் ஏப்ரல் 2ம் தேதி 59 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. வெறும் 10 நாளில் சுமார் 40000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிகச்சிறந்த நாடு பிரான்ஸ்
பிரான்சில் கடந்த மார்ச் 30ம் தேதி 418 பேரும், மார்ச் 31ம் தேதி 499 பேரும், ஏப்ரல் 1ம் தேதி 509 பேரும், ஏப்ரல் 2ம் தேதி 1355 பேரும் உயிரிழந்துள்ளனர். அதாவது இந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் 2800க்கும் மேற்பட்டோர் பிரான்சில் உயிரிழந்துள்ளனர். உலகின் மிகச்சிறப்பான மருத்துவ வசதிகள். நோய் தடுப்பு சோதனை முறைகள் கொண்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று. அதுமட்டுமின்றி உலகின் வல்லரசு தேசங்களில் பிரான்ஸ் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. அந்த தேசமே இப்போது கொரோனாவின் கொரப்பிடியில் தப்ப முடியாமல் தவித்து வருகிறது. எனவே நாம் அரசின் அறிவுறுத்தல்களை கடைபிடித்து வீட்டிலேயே இருப்பது பாதிப்பை குறைக்கும்.