• search
பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை.. இன்ஹேலர் அல்லது மாத்திரை போதும்- ஸ்வீடன் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு

Google Oneindia Tamil News

பாரிஸ்: இப்போது, ​​கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில், அந்த தடுப்பூசிகள் இன்ஹேலர்கள் அல்லது மாத்திரைகளாக மாறி சப்ளை செய்யப்படக் கூடும்.

தெற்கு ஸ்வீடனின் மிகப்பெரிய அறிவியல் பூங்காக்களில் ஒன்றான மெடிகன் வில்லேஜில் உள்ள ஒரு ஆய்வகத்தில், விஞ்ஞானி இஞ்செமோ ஆண்டர்சன் கையில் ஒரு மெல்லிய, பிளாஸ்டிக் இன்ஹேலரை வைத்திருக்கிறார், இது ஒரு தீப்பெட்டியை விட பாதி அளவுக்குத்தான் உள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்த சிறிய தயாரிப்பு ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கக்கூடும் என்று அவரது குழு நம்புகிறது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் .. பெரிய சரிவு இல்லை.. அப்படியே தொடரும் பாதிப்பு ! தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் .. பெரிய சரிவு இல்லை.. அப்படியே தொடரும் பாதிப்பு !

மலிவான மருந்து

மலிவான மருந்து

"இது எளிதானது மற்றும் உற்பத்தி செய்வது மிகவும் மலிவானது" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஹன் வபோர்க் கூறுகிறார். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இன்ஹேலர்களை உருவாக்கும் இந்த குழு, இப்போது கொரோனாவை தடுக்கும் இன்ஹேலர்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.

வெப்ப நிலை பிரச்சினையில்லை

வெப்ப நிலை பிரச்சினையில்லை

இந்த மருந்து 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கூட தாங்கும். உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்த தற்போதைய பரவலான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை சேமிக்க தேவையான நிபந்தனைகளுடன் ஒப்பிட்டால், இது மிகப்பெரிய மாறுபாடு ஆகும். ஏனெனில் அந்த தடுப்பூசிகள் அவை -70 சி போன்ற வெப்பநிலையில் கண்ணாடி குப்பிகளில் வைக்கப்பட வேண்டும், அல்லது அவை செயல்திறனை இழந்துவிடும்.

வசதி அதிகம்

வசதி அதிகம்

ஆனால், இவர்கள் தயாரிக்கும் மருந்தை குளிர்பதன வசதி தேவையில்லாமல் மிக எளிதாக விநியோகிக்க முடியும். மேலும் இது சுகாதார பணியாளர்களின் தேவை இல்லாமல் மக்களாகவே பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளது முக்கிய அம்சம். கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் நோயெதிர்ப்பு பேராசிரியர் ஓலா வின்கிஸ்ட் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

 இரு வகை உருமாறிய கொரோனா

இரு வகை உருமாறிய கொரோனா

இந்த நிறுவனம் தற்போது கொரோனா வைரசின் பீட்டா (தென்னாப்பிரிக்க) மற்றும் ஆல்பா (யுகே) வகைகளில் அதன் பவுடர் வடிவிலான இந்த தடுப்பூசிகளை பரிசோதித்து வருகிறது. தடுப்பூசி சப்ளையில் திணறும் ஆப்பிரிக்காவில் இந்த மருந்துகள் பலனளிக்கும். எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று இந்த குழு நம்புகிறது.

  COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
  இன்ஹேலர்

  இன்ஹேலர்

  வெப்பமான தட்பவெப்பநிலை, மின்சார சப்ளையிலுள்ள பிரச்சினை ஆகியவை கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் சவால்களாக உள்ளன. அதற்கு இந்த பவுடர் வடிவிலான தடுப்பு மருந்து மாற்றாக மாறும். இந்த மருந்து இதுவரை, எலிகள் மீது மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஐ.எஸ்.ஆர் மற்றும் ஐகனோவோ அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மனிதர்களிடம் இது பற்றிய ஆய்வுகளைத் தொடங்க போதுமான நிதி திரட்டியுள்ளன. இந்த மருந்து மாத்திரை வடிவிலோ, அல்லது இன்ஹேலர் வடிவிலோ தயாரிக்கப்பட்டு மக்களிடையே வினியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

  English summary
  Now, the vaccine is being given against corona. But in the future, those vaccines may be supplied in the form of inhalers or tablets.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X