பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னங்க சொல்றீங்க...கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டா ஆண்மை குறைபாடு வருமா?

Google Oneindia Tamil News

பாரீஸ் : கோவிட் 19 தடுப்புப்பூசி போட்டுக் கொண்டால் விந்தணுக்கள் பாதிக்கப்பட்டு, ஆண்மை குறைபாடு ஏற்படலாம் என புதிய ஆய்வில்,ஆதாரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி, உயிரிழப்புக்கள் அதிகரித்து வந்தாலும் அதிலிருந்து காத்துக் கொள்ளும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதிபர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், டாக்டர்கள் என பல விஐபி.,க்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு, மற்றவர்களையும் போட்டுக் கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் சாமானிய மக்கள் மட்டுமின்றி, சுகாதாரப் பணியாளர்களே தயக்கம் காட்டி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழக்கக் கூடும் என்ற அச்சம் ஒருபுறம், தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் மறுபுறம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் சிலரே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என தங்களிடம் வரும் நோயாளிகளை அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு

ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு

கொரோனா தடுப்பூசியால் விந்தணுக்கள் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வில் கோவிட் 19 வைரஸ் மற்றும் அதற்கு செலுத்தப்படும் மருந்துகள் ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தை குறிவைத்த தாக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மறுக்கும் நிபுணர்கள் :

மறுக்கும் நிபுணர்கள் :

இந்த ஆய்வு முடிவுகளை நிபுணர்கள் பலர் மறுத்துள்ளனர். இது வரை இதற்கு எந்தவித ஆதாரபூர் நிரூபணமும் இல்லை னெ தெரிவித்துள்ளனர். 2019 முதல் இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சுவாச மண்டலத்தை தாக்கக் கூடியது, நுரையீரல், சிறுநீரகம், இதயம் போன்றவற்றை நேரடியாக தாக்கக் கூடியது என்பது மட்டும் தான் நிரூபிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

ஜெர்மனி ஆராய்ச்சிகள் கூறுவது என்ன :

ஜெர்மனி ஆராய்ச்சிகள் கூறுவது என்ன :

ஜெர்மனி பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், நுரையீரலை தாக்கும் அதே கிருமி, ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்திலும் காணப்படுவது திசுவியல் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல் திசுக்களில் ஏற்படுத்தும் அதே அளவு பாதிப்பை இனப்பெருக்க மண்டலத்திலும் ஏற்படுத்தும்.

சோதனை விபரம் :

சோதனை விபரம் :

10 நாட்கள் இடைவெளியில் 60 நாட்கள், கொரோனா பாதித்த 84 ஆண்களிடமும், ஆரோக்கியமான 105 ஆண்களிடமும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் கொரோனா பாதித்த ஆண்களின் விந்தணுக்களில் மரபணு பாதிப்பு, ஆக்சிஜன் அழுத்தம், விந்தணுக்களின் தரம், உடலில் புரோட்டீன் தன்மை ஆகியன பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஆண்மை குறைபாடு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்கின்றனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதா :

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதா :

கோவிட் 19 பாதிப்பானது ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தை கடுமையாக தாக்கக் கூடியது என உலக சுகாதார மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே இது தொடர்பான பல ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எது உண்மை :

எது உண்மை :

இந்த ஆராய்ச்சி முடிவுகளை லண்டன் மருத்துவ ஆய்வு கழகம் மறுத்துள்ளது. அவர்கள் கூறுகையில், கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி திறன் குறைந்திருப்பது உண்மை தான். ஆனால் அதற்கு வைரஸ் நேரடி
காரணமாக இருக்க முடியாது. கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆண்கள், உடல் எடை அதிகம் கொண்டவர்கள். இது கூட அவர்களின் விந்தணு உற்பத்தி தன்மை பாதிக்கப்பட காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

English summary
Covid-19 may damage sperm quality and reduce fertility in men, according to a new study based on experimental evidence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X